Ad Space avaiable

ஞானசார தேரருக்கு தெரியாவிட்டால் நான் பௌத்த மதத்தை பற்றி சொல்லிக்கொடுக்கிறேன் !


ஞானசார தேரருக்கு தெரியாவிட்டால் நான் அவருக்கு பெளத்த தர்மம் பற்றி சொல்லிக்கொடுக்கிறேன் என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

திவயின சிங்கள நாழிதழுக்கு அவர் வழங்கிய செய்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நபிகள் நாயகத்தை பற்றி பேசும் உங்களுக்கு அல்குர் ஆண் பற்றி தெளிவில்லை என ஞானசார தேரர் கூறுகிறாரே என அசாத் சாலியியிடம் கேட்கப்பட்ட போது அதற்க்கு பதில் வழங்கிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு பதில் வழங்கிய அவர்..

பௌத்த  மதகுருவுக்கு பௌத்த தர்மம் தொடர்பில் தெரியாமல் இருக்கும் போது அசாத் சாலிக்கு குரான் தொடர்பில் எவ்வாறு முழுமையாக தெரிந்திருக்கும்.நான் உலமா அல்ல. அல் குரானை முழுமையாக தெரிந்த உலமாக்கள் உள்ளனர்.ஞானசார தேரர் பௌத்த தர்மத்தை முழுமையாக அறிந்திருந்தால் பிற மதங்களி புண்படுத்தும் விதமாக கருத்து கூறமாட்டார்.புத்த பெருமான் எந்த சந்தர்பத்திலும் பிற மதங்களுக்கு நிந்தனை செய்தாக எங்கும் இல்லை.அது ஞானசார தேரருக்கு தெரியாவிட்டால் நான் அவருக்கு பௌத்தமதத்தை பற்றி சொல்லிக்கொடுக்கிறேன்.புத்தர் அகிம்சையை போதித்த போதும் ஞானசார தேரர் அனைவரையும் தூற்றுகிறார்.நாட்டின் தலைவருக்கு பிரதமரையும் தேவையில்லாமல் விமர்சிக்கிறார்.அவர் பெளத்த மதத்தை நிந்தனை செய்யும் வகையில் நடந்துகொள்கிறார்.



ஞானசார தேரருக்கு தெரியாவிட்டால் நான் பௌத்த மதத்தை பற்றி சொல்லிக்கொடுக்கிறேன் ! ஞானசார தேரருக்கு தெரியாவிட்டால் நான் பௌத்த மதத்தை பற்றி சொல்லிக்கொடுக்கிறேன் ! Reviewed by Madawala News on 7/10/2016 02:47:00 PM Rating: 5