Ad Space Available here

நோன்பு பெருநாள் முன்னிட்டு யாழ் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

பாறுக் ஷிஹான்

அகில இலங்கை உலமா சபை யாழ் கிளிநொச்சி கிளை உப தலைவரும்  மக்கள்பணிமனைத் தலைவருமான  பி.எஸ்எம் சுபியான் மௌலவி   ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்து


ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து மகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு மக்கள் பணிமனைத் தலைவர் பி.எஸ்எம் சுபியான் மௌலவி  தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரமழானிலே பள்ளிவாசல்கள் நிரம்பிக் காணப்பட்டன. நல்லுபதேசங்கள் கேட்கும் பாக்கியம் இரவும் பகலுமாக கிடைத்த வண்ணம் இருந்தன.

இவ்வாறெல்லாம் நல்ல பல விடயங்களைப் பெற்றுக் கொண்ட நாம் அதன் பக்குவத்திலும் பயிற்சியிலும் எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே ரமழானில் நாம் அடைந்த பயனாகும்.

அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகிய ரமழானில் எமக்கு அதனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பு அல்குர்ஆனை ஓதுவது, விளங்குவது, வாழ்க்கையில் எடுத்து நடப்பது, மற்றோருக்கு எடுத்துச் சொல்வது ஆகிய அனைத்தின் மூலமே நிறைவுபெறும். தானதர்மங்கள் செய்து ஷைத்தானிய உணர்வுகளுக்கு விலங்கிட்டு வாழ்ந்த நாம் ரமழானில் பெற்ற பயனை ஏனைய காலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தருணத்தில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. நோன்பென்றும் பாராது காஸாவிலுள்ள முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி, படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு பலஸ்தீன மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக துஆ செய்வோமாக.

எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகருத்தருள்வானாக. 'நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களின் கூலியை வீணாக்குவதில்லை' (18:30) தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஈத் முபாரக் என மக்கள் பணிமனைத் தலைவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லோரது நன்மைகளுக்காகவும் வாழ்வோம்’- நோன்புப் பெருநாள் செய்தியில்வடக்கு மாகாணசபை உறுப்பினர். றிப்கான் பதியுதீன்

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இஸ்லாமிய உறவுகளே!

உங்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்,

ஈத் முபாரக்

யாழ்: மகிழ்ச்சிகரமான இந்த சந்தர்ப்பத்திலே தங்களோடு ஒருவனாக ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த தேசத்தில் இன்றைய திகதியில் எமது எதிர்பார்ப்புகள் எல்லாம் எமது தேசத்தில் கௌரவமான பிரஜைகளாக! இந்த தேசத்தின் நலன்களை முதன்மைப்படுத்துகின்ற சமூகமாக! உண்மை, நேர்மை, மனிதநேயம், நீதி மேலோங்க உழைக்கின்ற சமூகமாக! அமைதி, சமாதானம், சகவாழ்வு, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி காணுகின்ற தேசத்தின் பங்காளிகளாக வாழ்வதேயாகும். இதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இதுவரைகாலமும் எமது சமூகத்தின் வரலாறு மிகச்சிறப்பான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றது; என்றாலும் அண்மைக்காலமாக அதன் தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்த விசமமான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் துள்ளியமாக அறிந்துகொள்தல் வேண்டும். நிலைதடுமாறி எமது இயல்புகளை மீறி, மார்க்கத்தின் வழிகாட்டல்களை புறந்தள்ளிவிட்டு வேறு ஒருவழியில் நாம் பயணிப்பது பொறுத்தமற்றது. எனவே நிதானமான போக்கில் எமது மார்க்கத்தின் இயல்புகளோடு, எமது மக்களின் அபிலாஷைகளோடு இணைந்த ஒரு வழிமுறை குறித்து நாம் சிந்திக்கின்றோம்.

மக்களுக்கு விசுவாசமான ஆட்சிமுறைமை, சட்டரீதியான நடைமுறைகள், ஊழல்கள் இல்லாத நிர்வாக முறைமை, வெளிப்படைத்தன்மையோடு நேர்மையோடு மனிதாபிமானத்தோடு கூடிய அரசியல் செயற்பாடுகள் எமது தெரிவுகளாக இருக்கின்றன, இவற்றை நாம் வலியுறுத்தவேண்டும், இத்தகைய வழிமுறைகளை நாம் எமது வழிமுறைகளாக மாற்றியமைக்கவேண்டும். அப்போது இந்த நாட்டில் நிரந்தரமான அமைதி நிலவும்.எல்லோரது நன்மைகளையும் உறுதிசெய்கின்ற சமூகமாக எம்மால் வாழ முடியும்.

இத்தகைய நல்ல சிந்தனைகளைச் சுமந்தவர்களாக இந்த ஈகைத் திருநாளை நாம் எல்லோரும் நோக்குவோம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மனிதாபிமான அவஸ்த்தைகளை எதிர்கொண்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் அவர்களது விடுதலைக்காகவும் நாம் பிரார்த்திப்போமாக, குறிப்பாக பலஸ்தீனத்தின் காஸா மண்ணில் அரங்கேறும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவுக்கு வருவதற்காகவும் பிரார்த்திப்போமாக. ஈத் முபாரக், ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

 முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாக இப்புனித நாளில் பிரார்திப்போம்’ வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்)


உலகளாவிய ரீதியில் முஸ்லிம்சமூகம் எதிர்நோக்கும் இனவாத,மதவாத செயற்பாடுகள்ஒழிக்கப்பட்டு முஸ்லீம்கள் நிம்மதியாகவாழும் சூழ்நிலை உருவாக
இப்புனித நாளில் பிரார்த்திப்போம்என அகில இலங்கை மக்கள்காஙகிரஸின் வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்)  நோன்புப்பெருநாள் செய்தியில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில்  மேலும்
தெரிவித்திருப்பதாவது :-

முப்பது நாட்களாகநோன்பு நோற்று அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தைப் பெற்றுபுனித நோன்புப்பெருநாளை கொண்டாடும்அனைத்து முஸ்லிம்களுக்கும்;எனதும் எனது கட்சியின்சார்பாகவும் வாழ்த்துக்களைக்கூறுவதில் மட்டற்ற
மகிழ்ச்சியடைகின்றேன்.

உலகலாவிய ரீதியில் நாம்பெருநாளைக் கொண்டாடிக்
கொண்டிருக்கும் இத்தருனத்தில்மறுபுறம் குறிப்பாக பலஸ்த்தீனில்எமது சமூகம் மிகப் பெரும்
கொடூரமான சூழ் நிலைக்குள்சிக்கி தத்தளித்துக்
கொண்டிருப்பதை நினைக்கும்போது எம் உள்ளங்கள் வெடித்துச்சிதறிவிடும் போல் உள்ளது.

பலஸ்தீனில் மட்டுமன்றி உலகம்பூராகவுமுள்ள முஸ்லீம்கள்
இன்று இனவாத மதவாதவெறியர்களால் துவம்சம்
செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்அபாய நிலை தொடர்ந்த
வண்ணமேயுள்ளது.புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
ஒரே ஒரு காரணத்துக்காகவே இன்று முஸ்லிம்கள்
யூதர்களாலும் நசாராக்களாலும்அதிக
துன்பத்தை எதிர்நேக்கி வருகின்றனர்.

பல பில்லியன் கோடி பெறுமதியானமுஸலீம்களின் சொத்துக்கள்சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டும்
பள்ளிவாசல்கள்இகுர்ஆன் எனதீக்கிரையாக்கபபட்டும்
வெறிபிடித்தாடும் இக்கொடூரமிக்கவர்களிடமிருந்து எமது சமூகத்தை நாம்காப்பாற்ற அனைத்து முஸ்லீம்களும்
ஒன்று படுவதே இந்தகொடூரர்களுக்கு நாம் கற்பிக்கும்
தகுந்த பாடமாக அமையும்என்பதை இச்சந்தரப்பத்தில்
வேண்டிக்கொள்கின்றேன்.

எனவே நோன்புப் பெருநாளைக்கொண்டாடும் இலங்கை வாழ்முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகிலுள்ள
முஸ்லீம் நாடுகளில் வாழும்முஸ்லிம்களும் முஸ்லிம்கள்
சிறுபான்மையினராக வாழும்நாடுகளிலுள்ள எமது உறவுகள்அனுபவிக்கும் அனைத்துத்து
துயரங்களும்அகதி வாழ்க்கை முறையும்
ஒழிந்து கௌரவமிக்க நிம்மதியான
வாழ்க்கைப் பயணம் அமைய இந்நாளில்
இறைவனிடம் மன்றாட்டமாக துஆ
செய்வோம்.

வட மாகாண சபை உறுப்பினர் ஹபிப் முஹம்மட் றயீஸின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனிதமான பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும்  பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதுடன் இப்பெருநாள் தினம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சமாதானம் சமத்துவம் சகோதரத்துவம் பொருந்திய ஒன்றாக அமைய வேண்டும் என்று தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் வட மாகாண சபை உறுப்பினர் ஹபிப் முஹம்மட் றயீஸ் தெரிவித்தார்.
மேலும் தனது வாழ்த்துச்செய்தியில்: இத்தினத்தைக் கொண்டாடும்  நாம் அடுத்த பெருநாள் வருவதற்கிடையில் வெளிநாடுகளில் பணியாற்றும்/ வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்ல நினைத்துள்ள அனைத்து நம் தாய்மார், சகோதரிகள், மனைவிமார், பிள்ளைகள் அனைவரையும் தடுத்து நம்நாட்டிலேயே தொழில் செய்து தன்குடும்பத்துடன் சந்தோஷமாக தன் வீட்டிலேயே கழிப்பதற்க்கு திடசங்கற்பம் பூணுவோம்.

கடந்த காலங்களில் இலங்கைத் திரு நாட்டில் ஆயுதப் போராட்டம் வெடித்து பல்வேறு வகையிலும் நாடு அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தது. பின்னர் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு - நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை.

அதேவேளை கடந்த கால ஆட்சியில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. முஸ்லிம்களின் சமய -  கலாசார உரிமைகள் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு மக்கள் தமது வாக்குப் பலத்தின் மூலம் ஜனநாயக ரீதியாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தினர்.

பின்னர் இன்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறோம். எனவே எவ்வாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடி ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை நாட்டில் இருந்து வெளியேற்றினரோ அவ்வாறே அனைத்து இன மக்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயக் விரோதிகளை தோற்கடிக்க வேண்டும்.

இதன் மூலம் தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியை ஸ்திரப்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும் தமிழ் - முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழ்வதற்குமான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்' என்று முதலமைச்சர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில்    வட மாகாண சபை உறுப்பினர் ஹபிப் முஹம்மட் றயீஸ்குறிப்பிட்டுள்ளார்


முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மஹ்மூத் பலாஹி அவர்களின்  நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்திமுப்பது நாட்கள் நோன்பிருந்து தொழுகை ஸக்காத் திக்ரு ஸலவாத் மற்றும் குர்ஆன் போன்ற நல்லமல்கள் புரிந்து ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப்பெருநாள் கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இதயம் கணிந்த புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் சாந்தி சமாதானம் என்ரென்றும் நிலவவேண்டும் எனவும் முஸ்லிம்களாகிய நாங்கள் தன்மானத்துடனும், தலைநிமிர்ந்தும், சம உரிமையுடனும், சகவாழ்வுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

அதேபோல் நாம் இன்று கொண்டாடும் இனிய நன்நாளில் பலஸ்தீனில் வாழும் எமது உடன் பிறவா சகோதரர்கள் மிகவும் கஷ்டத்திற்கும் துன்பத்திற்கும் மத்தியில் அகதி முகாம்களிலும் பாதையோரங்களிலும் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர். இவர்களுக்காக நாம் அதிகம் அதிகம் துஆ செய்வது எமது முக்கிய கடமையாகும்.

அல்லாஹ் இவர்களுக்கு விடிவை கொடுக்க வேண்டியுள்ளதோடு அவர்களுக்கு நிலையான சமாதானத்தை கொடுக்க மேலும் நானும் நீங்களும் இனிய நன்நாளில் மீண்டும் ஒருமுறை பிரார்த்திப்போம்.
நோன்பு பெருநாள் முன்னிட்டு யாழ் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி  நோன்பு பெருநாள் முன்னிட்டு யாழ் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி Reviewed by Madawala News on 7/05/2016 08:20:00 PM Rating: 5