நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் எத்திவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..


ரமழானின் பயிற்சிகளை நினைவுகூர்ந்து அதன் பயன்களை அனுபவிக்கத் துவங்கும் இந்நாளில் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் எத்திவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஈத் முபாரக்!

மலரும் இந்த நோன்புப் பெருநாள் உலகிலும் குறிப்பாக முஸ்லிம் உம்மத்திலும் மகிழ்ச்சி, மன அமைதி, சுபிட்சம், பரஸ்பர ஒத்துழைப்பு, பரோபகாரம், புரிந்துணர்வு, நல்லிணக்கம் மற்றும் அன்பு, சகோதரத்துவம் முதலான பெறுமானங்களைக் கொண்டதாக அமைவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம். 

முஸ்லிம் உம்மத் கண்ணியமிக்க ரமழானில் செய்த நல்லமல்கள், பெற்ற பயிற்சிகள், உவந்தளித்த தர்மங்கள், அனுபவித்த சிரமங்கள், இழந்த உடமைகள், உயிர்கள் முதலான அனைத்திற்கும் சிறந்த உலக, மறுமைப் பேறுகளை யா அல்லாஹ் குறைவின்றி நீயே வழங்கிட வேண்டும்!

இந்த உம்மத்தில் அவலங்கள் தீர்ந்திடவும் சோபனங்கள் மலர்ந்திடவும் இந்த நன்னாளில் உன்னிடம் கரமேந்துகிறோம். கண்ணியமிக்க ரமழானில் உன்னதமான இறையுணர்வுகளோடு எங்களை வாழவைத்தவனே அதே நல்லுணர்வுகளோடு இறுதி மூச்சு வரை எங்களை வாழச் செய்வாயாக! ரமழானிலும் நாங்கள் செய்த தவறுகளை, விட்ட குறைகளை, ஏற்பட்ட பொடுபோக்குகளை மன்னித்து எமக்கு அருள் புரிவாயாக!

இன்றைய நாளை பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்போடு இருப்பவர்கள் அனைவரும்  நினைவுகளோடும் உள அமைதியோடும் கொண்டாடுவதற்கு அருள் புரிவாயாக!

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் எத்திவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் எத்திவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. Reviewed by Madawala News on 7/05/2016 08:50:00 PM Rating: 5