Accaddemy

சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். நிறுவனத்திற்கு ஜெமீல் முயற்சியினால் கணனி, போட்டோக் கொப்பி இயந்திரங்கள்!

(பி.எம்.எம்..காதர்)

 

கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்துபுதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். நிறுவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம்.ஜெமீல் அவர்களின் முயற்சியினால் கணனிபோட்டோக் கொப்பி இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

வர்த்தககைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களிடம் ஜெமீல் விடுத்த வேண்டுகோளின் பேரில் அமைச்சரின் ஏற்பாட்டில் இவ்வியந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுவழங்கப்பட்டுள்ளன.

 

நேற்று முன்தினம் புதன்கிழமை(27-07-2016)சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். தலைவர் ஏ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றைக் கையளித்தார்.

 

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அப்துல் லத்தீப்சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் அல்-ஹாஜ் ஏ.ஏ.சலீம்அ.இ.ம. காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுத்தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர்செயலாளர் அப்துர் ராசிக்முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.கபீர் உட்பட எம்.பி.சி.எஸ். நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். நிறுவனத்திற்கு ஜெமீல் முயற்சியினால் கணனி, போட்டோக் கொப்பி இயந்திரங்கள்!   சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். நிறுவனத்திற்கு ஜெமீல் முயற்சியினால் கணனி, போட்டோக் கொப்பி இயந்திரங்கள்! Reviewed by Madawala News on 7/28/2016 10:36:00 PM Rating: 5