Accaddemy

பிரதேசத்தின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்:தாக்குதலுக்குள்ளான அம்பிடிய பள்ளிவாயல் தலைவர்...


கண்டி அம்­பிட்­டியவில் அமைந்­துள்ள மஸ்­ஜிதுல் உஸ்மான் தக்­கியா பள்­ளி­வாசல் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு 10.00 மணி­ய­ளவில் கல் வீச்சுத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­ய நிலையில் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மூவரை தேடி வருகின்றனர்.

பள்ளிவாயலை உடைக்க முற்பட்டவர்களின் இப்பள்­ளி­வாயில் கதவை உடைக்கும் முயற்சி தோல்­வி­ய­டைந்­துள்­ள­துடன் கல்­லெ­றிந்து சேதம் விளை­வித்­த­வர்கள் ''ஞான­சார தேரரை அசாத் சாலி கொலை செய்­வ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார்,அதனால் பள்­ளி­வா­சலை வைக்­க­மாட்டோம்'' என்று கூறிக்­கொண்டே கதவை உடைக்க முயற்­சித்­துள்­ளதாக அப்பள்ளிவாயல் அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் உள்ள வீட்டார் பொலிஸ் அவ­சர பிரி­வுக்கு அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்து ஸ்தலத்­திற்கு விஜயம்  செய்த பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரை கைது செய்­துள்­ளனர். 

சம்­பவம் முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­முக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அமைச்சர் மத்­திய மாகா­ணத்­திற்கு பொறுப்­பான பிரதி பொலிஸ்மா அதி­பரைத் தொடர்பு கொண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளார். 

பொலிஸார் கை ரேகை அடை­யா­ளங்­களை பதிவு செய்­துள்­ள­துடன் சந்­தே­கத்தின் பேரில் மேலும் மூவரை தேடி வரு­கின்­றனர். தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு 24 மணி­நேர பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.ஐந்து பொலிஸார் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளனர். 

மத்­திய மாகா­ண­சபை உறுப்­பினர் லாபிர் ஹாஜியார் ஸ்தலத்­திற்கு சென்று பள்­ளி­வாசல் சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்­டுள்ளார். கண்டி பகுதி முஸ்­லிம்கள் பொறுமை காக்கும் படியும்  ஜனா­தி­ப­தியின் உத­வி­யுடன் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கப்­படும் என்றும் அமைச்சர் ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

இந்த நிலையில் பள்ளிவாயல் தலைவர் இப்திகார் ஹாஜி சம்பவம் தொடர்பில் தற்போதய நிலவரம் தொடர்பிலும் கருத்து வெளியிடுகையில்,

ஆறு ஜன்­னல்­களின் கண்­ணா­டிகள் உடைந்­துள்­ளன.  பெரிய கல்­லொன்­றைக்­கொண்டு பள்­ளி­வாசல் கேட்டை உடைக்க முயற்­சித்­துள்­ளனர். அருகில் இருந்த வீட்டில் பெண்கள் மாத்­தி­ரமே இருந்­துள்­ளனர்.

வீட்டைச் சேர்ந்த ஒருவர் நிருவாக சபை உறுப்­பினர். அவர் வெளியில் சென்­றுள்ளார். பெண்­களால் மேற்படி சம்­பவம் வீட்டு உரி­மை­யா­ள­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

வீட்டு உரி­மை­யாளர் பொலி­ஸா­ருக்கும் எனக்கும் அறி­வித்தார். ஸ்தலத்­திற்குச் சென்ற பொலிஸார்  பக்­கத்து வீட்­டாரை அச்­சு­றுத்­தி­விட்டு திரும்பிக் கொண்டு இருந்த ஒரு­வரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்ளனர்.தற்போதுபொலிஸார் பிரதேசத்திற்கு உச்ச பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் விஷேட ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

பிரதேசத்தின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்:தாக்குதலுக்குள்ளான அம்பிடிய பள்ளிவாயல் தலைவர்... பிரதேசத்தின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்:தாக்குதலுக்குள்ளான அம்பிடிய பள்ளிவாயல் தலைவர்... Reviewed by Madawala News on 7/08/2016 02:38:00 PM Rating: 5