நான் அவனில்லை சினிமா ஸ்டைலில் பெண்களை ஏமாற்றிவந்தவன் சிக்கினான் ! இலங்கையில் ...


கடந்த பல வரு­டங்­க­ளாக பத்­தி­ரி­கையில் வேலை­வாய்ப்பு விளம்­பரங்களை பிர­சு­ரித்தும் தொலை­பே­சியின் மூலம் தொடர்பு கொண்டு பெண்­களை வர­வ­ழைத்து ஏமாற்றி பணம், தங்க நகை­களை அப­க­ரித்துக் வல்லுறவுகளை மேற்கொண்டு வந்த சந்­தேக நபர் ஒரு­வரை நானு­ஓயா பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணையின் பின் நுவ­ரெ­லியா நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 

இது தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது கடந்த 3 ஆம் திகதி பிர­பல பத்­தி­ரிகை ஒன்றில் கம்­பனி ஒன்­றிற்கு பெண் ஊழி­யர்கள் தேவை­யென விளம்­பரம் செய்து தனது தொலை­பேசி இலக்­கத்­தையும் விளம்­ப­ரப்­ப­டுத்­தி­யுள்ளார்.


அந்த விளம்­ப­ரத்தை பார்த்த லிண்லே பிர­தே­சத்தைச் சேர்ந்த குடும்ப பெண் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட பொழுது கடந்த 4 ஆம் திகதி காலை 10 மணி­ய­ளவில் டெஸ்போர்ட் தங்­க­லைக்கு வரும்­படி அழைத்து அந்தப் பெண்னை தேயிலை தோட்ட குறுக்கு பாதையில் சிறிது தூரம் அழைத்து சென்று சந்­தே­க­நபர் தோல் பையில் வைத்­தி­ருந்த கத்­தியை காட்டி மிரட்டி தங்க சங்­கி­லி­யையும் அந்த பெண்­ணி­ட­மி­ருந்த கைய­டக்க தொலை­பே­சியையும் பையில் வைத்­தி­ருந்த பணத்­தையும் அப­க­ரித்துக் கொண்டு கற்­ப­ழிக்க முயற்சி செய்­துள்ளார். அந்த பெண் அங்­கி­ருந்து தப்பி ஓடி நானு­ஓயா பொலிஸ் நிலை­யத்தில் புகார் செய்­துள்ளார்.


நானு­ஓயா பொலிஸார் கடந்த 7 ஆம் திகதி கந்­தப்­பளை புறு­னசட் தோட்­டத்­தி­லுள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து கைது செய்து விசா­ர­ணையின் பின் நுவ­ரெ­லியா நீதி­மன்­றத்­திற்கு ஆஜர்­ப­டுத்­திய பொழுது சம்­பந்­தப்­பட்ட சந்­தேக நபரை நேற்று வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்ளார். 


இதே­வேளை நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை நுவ­ரெ­லியா நீதி­மன்­றத்தில் அடை­யாள அணி­வ­குப்பு நடை­பெற்ற பொழுது குறிப்­பிட்ட பெண் சம்­பந்­தப்­பட்ட நபரை அடை­யாளம் காட்­டி­யுள்ளார். 


கடந்த பல வரு­டங்­க­ளாக நுவ­ரெ­லியா, கந்­தப்­பளை, ஹட்டன், நோர்வூட், வெத­முள்ள உட்­பட பல இடங்­களில் பத்­தி­ரி­கையில் விளம்­பரம் செய்து பெண்­களை ஏமாற்றி தங்க நகை­க­ளையும் பணத்­தையும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும் அப­க­ரித்துக் கொண்டு பெண்­களை மான­பங்கம் செய்த சம்­ப­வங்­க­ளுடன் சந்­தேக நப­ருக்கு தொடர்பு இருக்­கலாம் என நானு­ஓயா பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் பிரியந்த, இன்ஸ்பெக்டர் அபேசிங்க, உதவி இன்ஸ்பெக்டர் 

நான் அவனில்லை சினிமா ஸ்டைலில் பெண்களை ஏமாற்றிவந்தவன் சிக்கினான் ! இலங்கையில் ... நான் அவனில்லை சினிமா ஸ்டைலில் பெண்களை ஏமாற்றிவந்தவன் சிக்கினான் ! இலங்கையில் ... Reviewed by Madawala News on 7/14/2016 10:01:00 AM Rating: 5