Oceas

கூட்டு எதிர்கட்சி பாதயாத்திரை தொடர்பான சில அப்டேட்ஸ் ...


கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளின் கீழ் மாபெரும் பாதயாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து இன்று காலை ஆரம்பமானது.

கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த நடைபவனி ஆரம்பமாகவிருந்த போதிலும் அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருந்த நிலையில் கண்டி பேராதெனிய கெடம்பேயியில் இருந்து ஆரம்பமான இந்த பாதயாத்திரையில் சுமார் 10000 - 15000  பேர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என கண்டியில் இருந்து கிடைத்த அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

இந்த பாதயாத்திரையில் முதல் நாள் ஏற்பாட்டு செலவாக 18 மில்லியன் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனுசரனையை பிரபல கட்டுமான நிறுவன வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

மாவனல்லை நகருக்குள் பாதயாத்திரை பிரவேசிக்க நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேகாலை நகருக்குள் பிரவேசிக்க தடைகோரி கேகாலை பொலிஸார் நீதிமன்றில் கோரிய தடை உத்தரவை நிதிமன்றம் நிராகரிதுள்ளது.

இந்த நிலையில் நாளை ( 29) மீண்டும் கூட்டு எதிர்ப்பு பாதயாத்திரை மாவனல்லையிலிருந்து நெலுந்தெனிய வரை செல்லவுள்ளது. 

மூன்றாவது நாளில் (30) நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவ வரையிலும், நான்காவது நாளான 31 ஆம் திகதி நிட்டம்புவயிலிருந்து கிரிபத்கொட நகர் வரையிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது நாளில் (01) கிரிபத்கொட நகரிலிருந்து கொழும்பு வரை நடைபவனி செல்லவுள்ள நிலையில் அதில் லட்சக்கனக்கானவர்களை கலந்துகொள்ள செய்ய கூட்டு எதிர்கட்சி திட்டமிட்டு வருகிறது..

கூட்டு எதிர்கட்சி பாதயாத்திரை தொடர்பான சில அப்டேட்ஸ் ... கூட்டு எதிர்கட்சி பாதயாத்திரை தொடர்பான சில அப்டேட்ஸ் ... Reviewed by Madawala News on 7/28/2016 09:33:00 PM Rating: 5