Accaddemy

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய பெண் பிரதமர்...


ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய  ஒன்றியத்திலிருந்து விலகுவதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் போது Remain எனும் சேர்ந்திருக்க வேண்டும் என்ற அணிக்காக பிரச்சாரம் செய்த பிரதமர் டேவிட் கெமரூன் அந்த அணி தோழ்வியடைந்து Leave அதாவது ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்ற அணி வெற்றி பெற்றதும் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். 

அதனை தொடர்ந்து கன்ஸவேர்டிவ் கட்சித்தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளுக்காக போட்டியிட ஐவர் முன் வந்திருந்த வேளை பாராளுமன்ற உருப்பினர்கள் படிப்படியாக வாக்களித்து இருவர் வந்தவுடன் அவ்விருவரும் அனைத்து உருப்பினர்களாளும் வாக்களிக்கப்பட்டு ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர்களான தெரஸா மே மற்றும் அன்ட்றியா லிட்சம் இருவரும் நேற்று வரை எஞ்சியிருந்தனர் ஆனால் இன்று காலை அன்ட்றியா லிட்சம் தான் நாட்டின் நலனுக்காக போட்டியிருந்து விலகுவதாக அறிவித்தார். 

எனவே தெரஸா மே கூடிய விரைவில் பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த பிரதமர் Leave அணியிலிருந்தே வரவேண்டும் என்ற கோஷம் ஆரம்பத்தில் பலமாக இருந்தபோதிலும் Remain அணியிலிருந்து தெரஸா மே தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகமான மக்களின் விருப்பமான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஆணையை தான் நிறைவேற்றுவேன் என்பதே அவரது தற்போதைய நிலையாகும். 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்காக பிரச்சாரம் செய்த தலைவர்கள் ஒவ்வொருவராக இராஜினாமா செய்து கொண்டுவருவதில் அன்ட்றியா லிட்சம் இருதியானவராகும். முதலில் UKIP தலைவர் நைஜல் பெராஜ் இராஜினாமா செய்திருந்தார். அதனை தொடர்ந்து அடுத்த கொன்சவேர்டிவ் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னால் இலண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சன் அவருடன் தோளோடு தோள் நின்ற மைக்கல் கவ்வினால் துரோகமிழைக்கப்பட்ட நிலையில் தான்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மைக்கல் கவ் பாராளமன்ற உருப்பினர்கள் வாக்களிப்பில் தொழ்வியுற்றார். 

அடுத்த பிரதமராக பதவியேற்கவிருக்கும் தெரஸா மே அவர் பதவியேற்க முன்னரே அவர் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

அதே வேளை பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பினுக்கு எதிராக கடந்த முறை உதவித்தலைவருக்காக போட்டியிட்டு படுதோழ்வியடைந்த அன்ஜலா ஈகல் போட்டியிடவுள்ளார். அவருக்கு தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உருப்பினர்களில் அதிகமானோரின் ஆதரவு இருக்கும் அதேவேளை கட்சி உருப்பினர்களில் ஜெரமி கோர்பினுக்கான ஆதரவே மிகப்பலமானதாக காணப்படுகிறது. 

ஐக்கிய இராச்சியத்திலிருந்து
அக்குறணை ஸப்வான் ஸஹீத்
ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய பெண் பிரதமர்... ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய பெண் பிரதமர்... Reviewed by Madawala News on 7/12/2016 08:13:00 AM Rating: 5