Free Space

புத்தர் மனித மாமிசம் உண்டதாக கூறிய போது மவுனமாக இருந்தவர்கள் தற்போது மத நிந்தனை தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது ..


புத்தர் மனித மாமிசம் உண்டதாக கூறிய போது மவுனமாக இருந்தவர்கள் தற்போது மத நிந்தனை தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது என பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரான சுன்னந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அவமத்திப்பு பேச்சு தொடர்பில் பொதுபல சேனா ஆதாரவு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் கருத்து கூறிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடந்து கருத்து வெளியிட்டுள்ள  அவர்..

புத்தர் மனித மாமிசம் உண்டதாக கூறிய போது மவுனமாக இருந்தவர்கள் தற்போது மத நிந்தனை தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது.இந்த நாட்டில் புத்த பெருமானாரை அவமதிக்கும் விதமாக ஒரு அமைப்புக்கு கருத்து கூறப்பட்டது போது அதனை கருத்து சுதந்திரமென கூறியவர்கள் இன்று இந்த சம்பவத்தை மத நிந்தனையாக காட்ட நினைக்கிறார்கள்.

“முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பவும்” என ஞானசார தேரர் தெரிவித்த கருத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு அவமதிப்பு ஏற்படுவது எப்படி எனவும், அல்லாஹ் தொடர்பிலும், குர்ஆன் தொடர்பிலும் எவ்வேளையிலும் தங்கள் அமைப்பு  விவாதத்துக்கு தயார் எனவும் பொதுபல அமைப்பின் என பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரான சுன்னந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் மனித மாமிசம் உண்டதாக கூறிய போது மவுனமாக இருந்தவர்கள் தற்போது மத நிந்தனை தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது .. புத்தர் மனித மாமிசம் உண்டதாக கூறிய போது மவுனமாக இருந்தவர்கள் தற்போது மத நிந்தனை தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது .. Reviewed by Madawala News on 7/05/2016 06:25:00 PM Rating: 5