Free Space

துருக்கி இராணுவப் புரட்சி விவகாரம்.. சில புதிய அப்டேட்கள் இதோ.














துருக்கி  இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ராணுவ புரட்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பிரிவினர் கைது செய்யப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிபர் தயீப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் இஸ்தான்புல் நகருக்கு ஓய்வெடுக்கச் சென்றிருந்த நிலையில் தலைநகர் அங்காராவில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக ஏன் இந்த திடீர் ராணுவ புரட்சி என்பதை அறிந்து கொள்ள அவருக்கு யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

எகிப்தில் அரசுக்கு எதிரான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு எர்டோகன் ஆதரவு அளித்தார். சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-ஆசாத் எர்டோகனுக்கு ஆகாதவர். பஷருக்கு எதிரான குழுக்களுக்கு எர்டோகன் ஆதரவு அளித்தார். எனவே, அல்-ஆசாத்துக்கு ஆதரவான ஈரானும், லெபனானும் எர்டோகனை எதிராக கருதி வருகின்றன.

சிரியாவில் அல் ஆசாத்துக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் எஸ்யூ-24 ரக விமானம், துருக்கி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே ரஷ்ய அதிபர் புடினுக்கு, எர்டோகன் ஜென்ம பகைவனாகினார்.

துருக்கி மக்கள் தொகையில் குர்து இன மக்கள் 20 சதவீதம் உள்ளனர். அவர்களது உரிமைகளை எர்டோகன் அரசு பறித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.mirror.co.uk/news/world-news/turkey-coup-live-updates-explosion-8431256
துருக்கி இராணுவப் புரட்சி விவகாரம்.. சில புதிய அப்டேட்கள் இதோ. துருக்கி  இராணுவப் புரட்சி விவகாரம்.. சில புதிய அப்டேட்கள் இதோ. Reviewed by Madawala News on 7/16/2016 11:02:00 AM Rating: 5