மூதூர் வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு சிறந்த முன்னெடுப்புக்கள்..

கடந்த காலத்தில் மூதூர் கல்வி வலயம் வருடாவருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் வீதம் மிகக் குறைவாக காணப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்தவிடயம்.

அந்த வகையில் கடந்த வருடம் 2015 இக்கல்வி வலயம் இலங்கையில் 98 வலயங்களில் 96 வது இடத்திற்கு வந்தமை மிக மனவேதனைக்குறிய விடயமும் கசப்பான உண்மையுமாகும் .

இதனை கருத்திற்கொண்டு இம்முறை 2016 வலயக் கல்விப்பணிப்பாளர் எம். கே. எம் மண்சூர் அவர்களின் திட்டமிடலில் புலமைப் பரிசில் பரீட்சை எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற வினாத்தாள்களை தழுவியதாக சுழச்சி முறையில் அனைத்து பாடசாலைகளுக்கும் பரீட்சை நடாத்தப்பட்டு அன்றைய தினமே அவ்வினாத்தாள்கள் திருத்தி புள்ளிகள் இடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன் மாணவர்கள் விடுகின்ற அதிகமான பிழைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதற்கான பரிகார நடவடிக்கையும் மேற் கொள்ளப்படுகின்றது

இது மிகச்சிறப்பான செயற்பாடு என்பதுடன் மாணவர்களது அடைவுமட்டத்திலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை .

அதுமாத்திரமல்ல கடந்த வெள்ளிக் கிழமை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட  தரம் 05 தர மாணவர்களுக்கான  பரீட்சையினை பார்க்கின்ற போது ஆங்கில பாடத்தில்ஆங்கில சிங்கள வினாக்கள் இடம் பெற்றமை கூட கடந்த காலத்தில்  பரீட்சை திணைக்களத்தினால் நடைபெற்ற பரீட்சை வினாக்களைக் கொண்ட மாதிரி வினாவாக அமைந்தது மிகவும் சிறப்பானது .

காரணம் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் குறைவாக புள்ளிகளை பெற்றுக்கொள்வது ஆங்கில சிங்கள கேள்விகளுக்கு தெளிவாக விடை எழுதாததே

எனவே இது போன்ற முயற்சிகள் ஆங்கில சிங்கள வினாக்களுக்கு விடை எழுத உதவியாக இருக்கும் என்று பாடசாலை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

மூதூர் வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு சிறந்த முன்னெடுப்புக்கள்.. மூதூர் வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு சிறந்த முன்னெடுப்புக்கள்.. Reviewed by Madawala News on 7/17/2016 12:36:00 PM Rating: 5