Accaddemy

புனித நோன்பு பெருநாள் தினத்திலும் கொழும்பில் தொடர்ந்து நீர்வெட்டு !!


கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, தெகிவளை, கல்கிஸ்ஸை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் பெலவத்தை, அம்பத்தலையிலும் நேற்று மாலை 6 மணி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர்வெட்டு இன்று மாலை 3 மணிவரை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நீர்வெட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பாக இன்று ஈத் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு இந்த நீர்வெட்டு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன.


புனித தினங்களில் இவ்வாறான நடவடிக்கைமனிதாபிமானத்துக்கும் தர்மத்துக்கும் ஏற்புடையதல்ல எனவும்

நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சும், அமைச்சின்  அதிகாரிகளும் மக்களின் கஷ்டங்களை அறிந்து செயற்படவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

புனித நோன்பு பெருநாள் தினத்திலும் கொழும்பில் தொடர்ந்து நீர்வெட்டு !! புனித நோன்பு பெருநாள் தினத்திலும் கொழும்பில் தொடர்ந்து நீர்வெட்டு !! Reviewed by Madawala News on 7/06/2016 08:05:00 AM Rating: 5