Accaddemy

சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்வு : அமைச்சர் நசீர்

(சப்னி அஹமட்)

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது ஆயுர்வேத மருந்தகம்  மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல்.எம்.நஸீர், இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; 

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதன்போது சாய்ந்தமருது ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து உரையாற்றியதாகவும் இதன் பின்னர், குறித்த மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு  அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்வு : அமைச்சர் நசீர் சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்வு : அமைச்சர் நசீர் Reviewed by Madawala News on 7/16/2016 10:41:00 AM Rating: 5