இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து செயல்பட தயார் : ஸாகீர் நாயக்.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக இந்திய  பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட தயார் என  ஜாகீர் நாயக் தெரிவித்துள்ளார்.
.

தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கும் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார்.
.
.
இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-மீடியாக்கள் தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை.
.

நான் எப்போதும் வன்முறையை தூண்டும் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன். வங்கதேச பயங்கரவாதி எனது ரசிகன் என்று தான் கூறியுள்ளான். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால் இந்திய மீடியாக்கள் என்னை பற்றி தவறாக சித்தரிக்கிறது.
.

இதனை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றால், நான் அதில் முழுமையாக செயல்பட தயார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
.

இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவன் ஜாகிர் நாயக்கின் பேச்சை விரும்பியதாக கூறியிருந்தான்.

இதையடுத்து மத்திய அரசும், மராட்டிய அரசும் ஜாகீர் நாயக் தொடர்பான விஷயங்களை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து செயல்பட தயார் : ஸாகீர் நாயக். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து செயல்பட தயார் : ஸாகீர் நாயக். Reviewed by Madawala News on 7/26/2016 09:14:00 PM Rating: 5