Kidny

Kidny

அதிகாரிகளும் என்னுடன் இரவு பகல் பாராமல் மிக பக்கபலமாக நிற்கவேண்டும் - சுகாதார அமைச்சர் நஸீர்


-அபு அலா -

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர்களின் பற்றாக்குறைமற்றும் தாதியர்கள்ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனிசமான அளவு நிவர்த்திசெய்யப்படும் இதேவேளை வைத்தியசாலையின்முக்கிய குறைபாடுகளையும் இவ்வருடஇறுதிக்குள் தீர்த்துவைக்கப்படவுள்ளதாககிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும்குறைபாடுகளை இல்லாமல் செய்வதுதொடர்பாகவும்எதிர்கால அபிவிருத்திகள் பற்றிய உயர் அதிகாரிகளுடனான மீள் ஆய்வுகுழுக்கூட்டம் நேற்று (26) மாலை கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் .எல்.முஹம்மட்நஸீர் தலைமையில் திருகோணமலை மாகாணசுகாதார பணிப்பாளர் பணிமனை காரியாலயகேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறைமட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்றமூன்று மாவட்டங்களிலும் உள்ளவைத்தியசாலைகளில் மிகவும் பின்தங்கிய நிலைமையில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளின் குறைபாடுகளை முதலில்நிவர்த்தி செய்யப்படுகின்ற இதேவேளை ஏனைய வைத்தியசாலைகளின் ஆளணிப்பற்றாக்குறைகளும் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திகள் மற்றும் வைத்தியசாலைகளின்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சகலமுன்னெடுப்புக்களும் இடம்பெற்றுவருகின்றதுஇதற்கு நீங்களும் பக்க பலமாக நின்றுவருகின்றீர்கள்இருந்தும் இந்த செயற்பாடுகளை துரிதப்படுத்த சகல அதிகாரிகளும் என்னுடன் பக்கபலமாக இரவுபகல் பாராமல் நின்று செயற்பட்டால்தான் எமதுமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை இவ்வருட இறுதிக்குள் ஓரளவுசெய்து முடிக்கலாம்அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் இன்றிலிருந்து ஆரம்பிக்க நீங்களும் என்னுடன் வாருங்கள்  என்றார்.

மேற்படி மீள் ஆய்வு குழுக்கூட்டத்தில் கிழக்குமாகாண அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன்உதவிச் செயலாளர் ஜே.உசைனுடீன்மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தன்மாகாணதிட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் வி.பிரேமானந்தன் மற்றும் கிழக்குமாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர்கள்கணக்காளர்கள்தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அதிகாரிகளும் என்னுடன் இரவு பகல் பாராமல் மிக பக்கபலமாக நிற்கவேண்டும் - சுகாதார அமைச்சர் நஸீர் அதிகாரிகளும் என்னுடன் இரவு பகல் பாராமல் மிக பக்கபலமாக நிற்கவேண்டும் - சுகாதார அமைச்சர் நஸீர் Reviewed by Madawala News on 7/27/2016 10:02:00 AM Rating: 5