Accaddemy

நோன்பு தரும் படிப்பினைளோடு ஏனைய சகோதர மக்களுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்...


எம்மிடையே அகமும் புறமும்  தூய்மைப் படுத்தி , ஒட்டு மொத்தமான பண்பாட்டு மாற்றத்தை  ஏற்படுத்திச் செல்லும் நோன்பை நோற்று விட்டு இன்று பெருநாளைக் கொண்டாடும் எமது இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மனம் நிறைந்த இனிய பெருநாள் வாழ்துக்களைத் தெரிவிப்பதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்  தெரிவித்துள்ளர்.  

நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள விசேட  வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

புனித நோன்பின் முக்கியத்தைவத்தை இலங்கையின் அனைத்து இன மக்களும் விளங்கி அதற்குரிய முதல்மரியாதையை வழங்கி வருவதை நாடு முழுவதும் காண்கிறோம். 

இது இலங்கையில் மட்டுமல்ல நோன்பின் சிறப்பை அதன்  அடிப்படை அம்சங்களை உலகிலுள்ள அனைத்து மக்களது உள்ளதையும் ஈர்த்த இன்றியமையாத ஒன்றாக அது அமைந்துள்ளது. ஏழையின் பசியினை அறியப் பயன்படும் மிகச் சிறந்த ஆயுதமாக நோன்பு உள்ளது.உலக முழுவதிலும் அரசத் தலைவர்கள் கூட தங்களுடைய அரச மாளிகைளில் நோன்பு திறக்கச் செய்வதிலும் நோன்பு தொடர்பான செய்திகளை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வரும் காட்சியை நாம் நாடுகள் முழுவதும் காண்கிறோம்.

இந்நிலையில் இலங்கை முஸ்லிம் எமது உண்மையான இஸ்லாம் மார்க்கம் காட்டும் வழிமுறையில் நின்று எம்மிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை மறந்து பரபரஸ்பர சிந்தனையின் மூலம் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். எனவே இஸ்லாம் நாட்டின் மீது பற்றுக் கொள்வதை இஸ்லாம் மறுப்பதில்லை. தற்போது எமது நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. எமது தனித்துவமான இஸ்லாமிய கலாசாரத்துடன் நின்று நோன்பு தரும் படிப்பினைளோடு ஏனைய சகோதர மக்களுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
 
நோன்பு தரும் படிப்பினைளோடு ஏனைய சகோதர மக்களுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்... நோன்பு தரும் படிப்பினைளோடு ஏனைய சகோதர மக்களுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்... Reviewed by Madawala News on 7/06/2016 09:52:00 AM Rating: 5