Ad Space Available here

செய்யத் அல் கொமைனியின் இலங்கை வருகையும் பின்னணியும் ...


-முஹம்மத் ரிழா -
இலங்கையுடனான நெருக்கமான உறவுகளை பேணிவரும் ஈரான் நாட்டின் அண்மைக்கால செயற்பாடுகளை நாம் நோக்கும் போது அவர்களின் உதவிகளின் நோக்கங்கள் வேறு  இலட்சியங்களை நோக்கி திரும்பியுள்ளதை புரிந்துகொள்ள முடிகின்றது. 

பொருளாதார ரீதியாக இலங்கைக்கு கைகொடுக்கும் ஈரானின் உதவிகளில் இதுவரை காலமும் அவர்களின் சுயநலன்கள் வெளிப்படையாக இருந்ததில்லை.ஆனால் தற்போது அந்த நாட்டின் செயற்பாடுகளை பார்க்கும் போது இந்நிலைமைகள் மாறி இலங்கை முஸ்லிம்களிடம் இல்லாத புதிய மதக் கோட்பாடுகள் புகுத்தப்படுத்துவதற்கான முயற்சிகளை வெளிப்படையாக காணமுடிகிறது.

இஸ்லாமிய அகீதா கொள்கையோடு நேரடியாக முரண்படும் ஷியாக் கொள்கைகளை நமது நாட்டில் வேரூன்றச் செய்யும் தந்திரோபாயங்கள் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்டு வருவதை அவர்களின் அண்மைய செயற்பாடுகளிலிருந்து அவதானிக்கமுடிகிறது.

இதனடிப்படையிலேயே ஈரான் இஸ்லாமிய புரட்சியின் ஸ்தாபகரான ஆயதுல்லாஹ் கொமய்னியின் பேரரின் அண்மைய இலங்கை விஜயமும் நோக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த விஜயம் வெரும் இராஜதந்திர நோக்கமுடைய விஜயமாக இருந்திருந்தால் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு, ஒப்பந்தங்கள் மற்றும் அபிவிருத்தி  செயற்பாடுகளுடன் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் அவரது வருகைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கான ஈரானிய தூதவர் முஸ்லிம் கலாசார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரையின் பேரில் சந்தித்து 

# ஆயதுல்லாஹ் கொமய்னியின் பேரருக்கும் ஜம்மியத்துல் உலமாவுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித்தருமாறும்,கொழும்பு பள்ளிவாசலொன்றில் ஜும்ஆத் தினத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளையும், கல்விமான்களையும் இஸ்லாமிய துறை சார்ந்தவர்களையும் வரவழைக்கச் செய்து ஜும்ஆத் தொழுகையை கொமய்னியின் பேரரின் பங்களிப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருவதோடு அந்த ஜும்ஆப் பிரசங்கத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கோரியுள்ள போது முஸ்லீம் விவகார அமைச்சர் சார்பில் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முக்கியஸ்தர் அந்த கோரிக்கைகளைப் காலதாமத்தை காரணம் காட்டி மிகவும் நாசூக்கான முறையில் நிராகரித்துள்ளார்.

இது தவிர குறித்த சந்திப்பில்  இலங்கை பள்ளிவாசல்களை அமைப்பது மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளை நியமிப்பத்தில் உள்ள வகுப் சபை சட்டங்கள் தொடர்பாக விபரங்களை கேட்டரிந்த ஈரான் தூதுவர் உத்தியோகப் பற்றற்ற முறையில் முக்கிய பள்ளிகளின் நிர்வாகிகளை சந்திக்க ஆவல்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயங்களை நாம் உற்று நோக்கும்போது ஈரான் இந்த நாட்டின் மத விடயங்களில் கொண்டுள்ள நாட்டத்தை  நாம் மேலெழுந்த வாரியாக கருத முடியாது.

ஈரானில் புரட்சி ஏற்பட்ட போது அந்த புரட்சியை இஸ்லாமிய புரட்சி எனக் கருதி உலகளாவிய முஸ்லிம்கள் அதை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் அது வெறுமனே மக்கள் புரட்சியாக ஷியா, சுன்னி இஸ்லாமிய கோட்பாடுகளின் முரண்பாடுகளால் வெடித்த ஒரு பிரச்சினையாக உருவெடுத்ததென்பதை நாம் காலப்போக்கில் உணர முடிந்தது. அரபுலக நாடுகளில் இன்று ஷியா சுன்னிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து முஸ்லிம்களை காவுகொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையிலும் ஷியாக்கொள்கையின் ஊடுருவல் இலங்கை வாழ் முஸ்லிம்களிடையே தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்குமென ஐயந் திரிபின்றி நாம் கருதமுடியும்.  

இலங்கையிலுள்ள கடும் போக்கு சிங்கள அமைப்புக்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மீது நெருப்புக்கணை பறக்கும் அனல் பிரச்சாரத்தையும், மதவாதத்தையும் தூண்டி சிங்கள, பௌத்தர்களை சினமூட்டும் காலம் இது. இப்படியானதொரு மோசமான காலகட்டத்தில் ஷியாக் கொள்கையை இங்கு ஊடுருவ வழிசமைப்பது நமக்கு ஆரோக்கியமானதல்ல. 

நமது நாட்டில் என்னதான் இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அந்த அமைப்புக்கள் ஏகத்துவக் கொள்கையிலும், கலிமாவிலும் முரண்படாமலேயே தமது பிரசாரத்தை முன்னெடுக்கின்றன் ஒருசில கருத்து வேறுபாடுகளால் மட்டும் அவர்கள் பிரிந்து நிற்பது நமக்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அடிப்படைக்கலிமாவுடன் முரண்படும் ஷியாக் கொள்கையை இங்கு நுழைக்க முயல்வது மிகக் கொடூரமான மத முரண்பாடுகளையும், மோதல்களையும் தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

சிரியா ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஷியா, சுன்னி மோதல்கள் உக்கிரமடைந்து அங்கு தொடர்ச்சியான வன்முறைகளே வெடித்து வருவதை நாம் காண்கின்றோம்.ஏற்கனவே காதினியாக் கொள்கையை (இஸ்லாத்தை விட்டுச் சென்ற முர்த்தத்கள்) பரப்பும் முயற்சிகள் நமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட போது முஸ்லிம் எம்.பிக்கள், அமைச்சர்கள் 20 பேர் ஒன்றித்து ஒப்பமிட்டு 2008ம் ஆண்டு கொள்கைப் பிரகடமொன்றையும் வெளியிட்டிருந்தனர். 

காதியானிகள் மார்க்கத்தை இலங்கை வாழ் முஸ்லிம்கள்  நிராகரித்துள்ள நிலையில் ஷியாக்கலாலும் நமக்கு கஸ்டம் வரக்கூடாதென்பதில் நாம் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.

ஏற்கனவே சிங்கள கடும் போக்கு மத வாதிகளால் பல்வேறு துன்பங்களை சுமந்து வாழும் நாம் ஷியாக்களின் கொள்கைகளை இங்கு பரவ இடமளிப்பதன் மூலம் அவர்களுக்கு மேலும் தீனிபோடுவதற்கு களமமைத்துக் கொடுக்கக் கூடாது.எனவே இதன் பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
செய்யத் அல் கொமைனியின் இலங்கை வருகையும் பின்னணியும் ... செய்யத் அல் கொமைனியின் இலங்கை வருகையும் பின்னணியும் ... Reviewed by Madawala News on 7/20/2016 02:12:00 PM Rating: 5