Accaddemy

ஐ எஸ் இன் இன்னுமொரு பெருந்தலை வீழ்ந்தது !


இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தேசம் என ஐ எஸ் அமைப்பு அடையாளப்படுத்தும் போர் அமைச்சர் ( மினிஸ்டர் ஒப் வோர் ) உமர் அல் ஷிஹானி கொல்லப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

தேடப்படும் தீவிரவாதியாக அமெரிக்காவினால் அடையாளம் காணப்பட்டுள்ள உமர் ஷிஹானி அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளாக பெண்டகன் உறுதி உறுதிசெய்துள்ளது.

இராக் மற்றும் சிரியாவில் பலமிழந்து வரும் ஐ எஸ் அமைப்புக்கு உமர் ஷிஷானியின் உயிரிழப்பு பாரிய பின்னடவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்ஜியா நாட்டு பிரஜையான உமர் அல் ஷிஷானி செச்னியா கிளர்ச்சிப்படையில் முக்கிய போராளியாக செயற்பட்டு ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போரிட்ட ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ எஸ் இன் இன்னுமொரு பெருந்தலை வீழ்ந்தது ! ஐ எஸ் இன் இன்னுமொரு பெருந்தலை வீழ்ந்தது ! Reviewed by Madawala News on 7/14/2016 07:49:00 AM Rating: 5