Accaddemy

நாமும் பேச்­சு­வார்த்­தைக்கு தயார்..


-ARA FAREEL -
முஸ்லிம் தரப்பு பொது­ப­ல­சே­னாவின் செய­லா­ளரை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்தால் நாம் தயா­ராக இருக்­கிறோம். பேச்­சு­வார்த்­தைகள் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கும் எமக்கும் இடையில் நிலவும் முரண்­பா­டுகள் தொடர்பில் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே தெரி­வித்தார்.

முஸ்லிம் தரப்­பு­ட­னான நேரடிப் பேச்­சு­வார்த்தை தொடர்­பி­லான பொது­ப­ல­சே­னாவின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;ஆனால் முஸ்லிம் கவுன்­ஸி­லையும் அசாத் சாலி­யையும் நாம் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் பகி­ரங்க விவா­தத்­துக்கு அழைக்­கிறோம்.

சில ஆவ­ணங்­க­ளுடன் அவர்­களை பகி­ரங்க விவா­தத்தில் சந்­திக்க விரும்­பு­கிறோம்.அசாத்­சாலி தற்­கொலைப் படை­யா­க­மாறி ஞான­சார தேரரை அழித்­து­விட்டு தானும் இறக்க தயார் எனும் கருத்­துப்­பட பேசி­யி­ருக்­கிறார். புத்தர் பெரு­மா­னுக்கு ஏசினால் இவ்­வாறு செய்­யும்­படி புத்த பெருமான் போதிக்­க­வில்லை. புத்தர் கருணையையே போதித்துள்ளார் என்பதை அவருக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.

நாமும் பேச்­சு­வார்த்­தைக்கு தயார்.. நாமும் பேச்­சு­வார்த்­தைக்கு தயார்.. Reviewed by Madawala News on 7/05/2016 02:23:00 PM Rating: 5