பிரான்ஸ் நீஸ் தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல் அல்ல ..



 
-Kalaiyarasan Tha-

பிரான்ஸ், நீஸ் நகரில் 80 பேரைக் கொன்ற தாக்குதலில், லாரி ஓட்டிச் சென்றவர் ஒரு "பொருளாதாரப் பயங்கரவாதி" என்று தெரிய வருகின்றது. அதாவது, பொருளாதாரக் கஷ்டம், பண நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட நபர் தான், லாரி ஓட்டிச் சென்று மோதி பலரைக் கொன்றுள்ளார். 

சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பெயரில் முஸ்லிமான அந்த நபர் மத நம்பிக்கையற்றவர். ஒரு நாளும் மசூதிக்கு சென்றதே கிடையாது. வீட்டில் கூட தொழுதிராதவர். 

தாக்குதல்தாரியை அறிந்த அயலாரும், நண்பர்களும் இந்தத் தகவலை தெரிவித்தனர். சமீப காலமாக பண நெருக்கடிக்கு ஆளானது மட்டுமல்லாது, மண முறிவு காரணமாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார். 

வழமை போல ஊடகங்கள் இதற்கு கண்,காது,மூக்கு வைத்து, உலகத் தலைவர்கள் கண்டிக்கும் அளவிற்கு  தீவிரவாதத் தாக்குதலாக்கி விட்டன. மர்ம நபர் ஓட்டி வந்த லாரியில் "பயங்கர ஆயுதங்கள்" கண்டுபிடிக்கப் பட்டதாக ஊடகங்களில் சொல்லப் பட்டது. ஆனால், லாரிக்குள் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி மட்டும் இருந்ததாக, நெதர்லாந்து தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டது.  

மேலும் 80 பேர் கொல்லப் பட்டதற்கு லாரி மோதியது மட்டுமே காரணம் என்று சொல்லப் படுவதும் சந்தேகத்திற்குரியது. அந்த நேரத்தில் பரவலாக துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப் பட்டதாக, நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வான வேடிக்கையை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை, அந்த இடத்தில் இருந்த டச்சு சுற்றுலாப்பயணி ஒருவர்,  டச்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார். 

(பிற்குறிப்பு: இந்தப் பதிவு முகநூல் விதிகளை மீறவில்லை. பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை ஆதரிக்கவில்லை என்பதை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க நெதர்லாந்து செய்தி நிறுவனத்தால் (NOS) வெளியிட்ட தகவல்.)


பிரான்ஸ் நீஸ் தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல் அல்ல .. பிரான்ஸ் நீஸ் தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல் அல்ல .. Reviewed by Madawala News on 7/16/2016 08:51:00 AM Rating: 5