Kidny

Kidny

இஸ்லாத்தின் நிழலில் பெருநாட்கள் சில வழிகாட்டல்கள்.
இஸ்லாத்தில் முக்கிய  இரு வணக்கஙகலுக்குப்பின் மிக  முக்கிய  இரு பெருநாட்களை அல்லாஹ் ஏறபடுத்தியுள்ளான்.ரமழானை நோன்பை முடித்து ஷவ்வால் முதலாம் பிறையும்,ஹஜ்ஜின் போது துல் ஹஜ் பத்தாம் நாளும் பெருநாட்களாகும்.இவற்றை முறையே ஈதுல் பித்ர்,ஈதுல் அல்ஹா என அழைக்கப்படும்.அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது, “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தைஅடைகிறாரோ,அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;

குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).(2:185).

இத்தினங்களில் இஸ்லாம் காட்டிய  வழிமுறைகளை நோக்கும் போது
இத்தினத்தில் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும் பொறுட்டு அவனை பெரிது படுத்தி தக்பீர் சொல்வது முக்கிய  வழிகாட்டலாக இருக்கின்றது.இதை உறத்த குரலில் தனித்தனியே சொல்வதுடன் அனைத்து  தூய்மையான இடங்களிலும் கூறலாம்.


இஸ்லாம் அமைதி,கஷ்டம்,இன்பம்,துன்பம் ஆகிய  அனைத்திலும் அல்லாஹ்வுடன் தொடர்ப்புடையதாக  இருக்க வேண்டும் என கூறுகிறது.இதன் படி இப்பெருநாளில் வணக்கம் மிக  முக்கித்துவம் பெறுகிறது.இத்தினத்தில் பெருநாட்தொழுகை முக்கிய இடம் பெறுகிறது.இதை வயது வித்தியாசமின்றி அனைவரும் தொழுகைதிடலில் ஒன்று கூடி தொழுகையைநிறைவேற்றுவர். ஒரு ஹதீஸில் “இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும்,

அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம். நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான)மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கின்றாகள்.(நூல், புகாரி:351).தொழுகைகு செல்லும் போது ஒரு வழியாலும் திரும்பும் போது இன்னொரு வழியாலும் திரும்புதல்.இதைஜாபிர் (ரலி) அறிவிக்கும் போது.பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். (புகாரி,எண்: 986).


இத்தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுதலும் இவற்றை உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்வதும் இஸ்லாம் காட்டிய வழிமுறையாகும்.  ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:என் அருகில் இரு சிறுமியர் "புஆஸ்”போர்பாடல்களைப்பாடிக்கொண்டிருந்தபோதுஅல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்என்னிடம்வந்தார்கள்; படுக்கையில் படுத்து,தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள்.அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று கடிந்துகொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன்னோக்கி"அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்"என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்;அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீரவிளையாட்டுகளைப்)பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க,என்னைத் தமக்குப் பின்னால்நிற்கவைத்துக்கொண்டார்கள்."அர்ஃபிதாவின் மக்களே! (சூடானியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள்.

நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது,"போதுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க,நான் "ஆம் (போதும்)" என்று சொன்னேன். "அப்படியானால் நீ போகலாம்!"என்று சொன்னார்கள்.(நூல் புகாரி எண்1622).இதில் உற்றார் உறவினர்களுடன் இணைந்து நடப்பது,சுக துக்கங்களில் பங்கு கொள்வது.சிறார்களுக்கும் அனபளிப்புகளை வழங்கல்,அவர்களை மகிழ்வூட்டல் போன்றன இதிலடங்கும்.இத்தினத்தில் வீண்விரயமின்றி இஸ்லாத்தின் வரையரக்குட்பட்ட  அழகிய  சிறந்த  ஆடைகளை அணிதல், சுவையான உணவுகளை உண்ணல் பறிமாறக்கொள்ளல் என்பனவும் இதில் முக்கியமானவையாகும்.இத்தினத்தில் நோன்பு வைப்பது தடுக்கப்பட்டது.

இன்னும் ஸகாத்துல் பித்ராவை தொழுகைக்கு முன் நிறைவேற்றிவிட  வேண்டும்.இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறும் போது:மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.(நூல்,முஸ்லிம்.801).


ஒரு முஸ்லிம் இஸ்லாம் காட்டிய  நல்ல வழிகளை தனது வாழ்வாக  எடுத்துக்கொள்வான்.இதற்கு மாற்றமான அந்நிய கலாச்சாரங்களை விட்டு தன்னையும் தன்னை சூழ உள்ளவர்களையும் பாதுகாப்பான்.இத்தகைய அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இத்தனங்களை சூது,மது,மாது,வீண்விரயம் என கழிக்காது அல்லாஹ்வுக்கு மிக  விருப்பமானதாகவும் அவனின்அருட்களை நிணைவுகூர்ந்து அவன் ஆகுமாக்கியவைகளை தாராளமாக அனுபவித்தும் இத்தினங்களை உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும்  கொண்டாடுவான்.அல்லாஹ் இத்தினத்தை அனைவருக்கும் அருளும்,சாந்தியும் நிறைந்த்தாக  ஆக்கியரள்வானாக.

ஆக்கம் அபூ உமர் அன்வாரி 

இஸ்லாத்தின் நிழலில் பெருநாட்கள் சில வழிகாட்டல்கள். இஸ்லாத்தின் நிழலில் பெருநாட்கள் சில வழிகாட்டல்கள். Reviewed by Madawala News on 7/04/2016 10:40:00 PM Rating: 5