சாகிர் நாயக் அவர்களுக்கு தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லை : மாஹாராஷ்டா மாநில புலனாய்வு பிரிவு...




பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் Dr.ஷாகிர் நாயக் அவர்களை தீவிரவாதிகளுடன் தொடர்புபடுத்தி திட்டமிட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில்,

அவர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு வைத்திருந்தமைக்கு எதுவித ஆதரங்களும் இல்லை என மாஹாராஷ்டா மாநில அரசின்  புலனாய்வு பிரிவு (Maharashtra State Intelligence Department ) அறிவித்துள்ளது.

சிவசேனா அமைப்பு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் Dr.ஷாகிர் நாயக் அவர்களை தீவிரவாதிகளுடன் தொடர்புபடுத்தி விமர்சித்து வந்ததுடன் அவர் இந்தியாவுக்கும் பிரவேசிக்கும் போது அவரை கைதுசெய்ய வேண்டும் என கூறிவந்தது.

அதனை தொடர்ந்து மாஹாராஷ்டா மாநில அரசு அந்த மாநில புலனாய்வு பிரிவு (Maharashtra State Intelligence Department ) க்கு இது தொடர்பில் புலானய்வு அறிக்கை ஒன்றை கோரியிருந்தது.

இந்த நிலையில்,

ஷாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்யவோ அவரை கைது செய்யவோ எதுவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை என மாஹாராஷ்டா மாநில அரசின்  புலனாய்வு பிரிவு (Maharashtra State Intelligence Department ) அறிவித்துள்ளது.


சாகிர் நாயக் அவர்களுக்கு தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லை : மாஹாராஷ்டா மாநில புலனாய்வு பிரிவு... சாகிர் நாயக் அவர்களுக்கு தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லை : மாஹாராஷ்டா மாநில புலனாய்வு பிரிவு... Reviewed by Madawala News on 7/12/2016 02:30:00 PM Rating: 5