அறி­வில்­லா­த­வர்­க­ளுடன் விவாதம் செய்­யக்­கூ­டாது என்றே குர்ஆன் கூறுகிறது...




-ARA FAREEL -
புனித குர்­ஆனை  இலங்­கையில்  தடை செய்ய வேண்டும் என்று பொது­ப­ல­சேனா  அமைப்பின் செய­லாளர்  ஞான­சார தேரர்  சவால் விட்­டி­ருப்­பதும்,  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பையும், சூரா­க­வுன்­ஸிலும் பொது­ப­ல­சேனா அமைப்­பிடம் இஸ்­லாத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்­பு­வி­டுத்­தி­ருப்­பதும், நகைப்­புக்­கு­ரி­ய­தாகும்.

ஞான­சா­ர­தேரர்  வாய்­கி­ழிய கத்­து­வதால் எதுவும் நடை­பெ­றப்­போ­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின்  பிரதிச் செய­லாளர்  மெள­லவி  எம்.எஸ்.எம்.தாஸிம் தெரி­வித்­துள்ளார். 

குர்ஆன் 1400 வடங்­க­ளுக்கு முன்பே அல்­லாஹ்வால் இறக்­கப்­பட்­ட­தாகும். இது  முழு உலக மக்­க­ளி­னதும்  வாழ்க்கை  அமைப்­பாகும். மக்­களை  நல்­வ­ழிப்­ப­டுத்­து­வது புனித குர்­ஆ­­னாகும் எமது நாட்டில் இலட்­சக்­க­ணக்­கான உல­மாக்­களின்   மனதில் குர்ஆன் அழி­யாது பதி­வா­கி­யுள்­ளது.  இலங்­கையில் 20 இலட்சம்  முஸ்­லிம்கள்  குர்­ஆனை இத­யத்தில்  ஏந்­தி­யுள்ளோம்.

முழு  உல­கிலும் 165 கோடி  முஸ்­லிம்­களின் உள்­ளத்தில் குர் ஆன் குடி­பு­குந்து வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறார்.  

இன்று  வரை குர்­ஆனின்  ஒரு புள்­ளி­யை­யேனும் எவ­ராலும் மாற்ற  முடி­யாமற்  போனது.  உலகில் பல்­வேறு   நாட்­ட­வர்கள் சம­யத்­தினர் குர்­ஆனை  மாற்­று­வதில் முயற்­சித்தும் தோல்வி  கண்­டார்கள். 

அல்குர் ஆன் இப்­ப­டிக்­கூ­று­கி­றது. நிச்­ச­ய­மாக நாமே குர்­ஆனை இறக்கி வைத்தோம். அதைப்­பா­து­காப்­பதும்  நாமே என்று அல்லாஹ் கூறி­யுள்ளான். ஞான­சார தேரரின் சவால் ஒரு­போதும்  வெற்­றி­பெ­றப்­போ­வ­தில்லை. இதற்­காக முஸ்­லிம்கள் நாம் அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை. 

குர்ஆன் இறக்­கப்­பட்­ட­போது கூட மக்கா மதீ­னாவில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. பலர் எதிர்த்­தார்கள்.  எதிர்ப்­பு­களின் மத்­தி­யிலே இன்று குர்ஆன் உல­க­ளா­விய ரீதியில் முதன்­மைத்­துவம் பெற்­றுள்­ளது. 

உல­மா­ச­பையோ  வேறும் எவரோ  ஞான­சார தேர­ருடன்  விவா­தத்­திற்குச் செல்லத் தேவை­யில்லை.

அறி­வில்­லா­த­வர்­க­ளுடன்  விவாதம்  செய்­யக்­கூ­டாது என்றே குர்ஆன் கூறுகிறது. நாட்டில் இனங்களுக்கிடையில் பதட்ட நிலையினை  உருவாக்க முயற்சிக்கும் பொதுபலசேனா அமைப்பினை நாட்டின் சட்டம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றார். 
அறி­வில்­லா­த­வர்­க­ளுடன் விவாதம் செய்­யக்­கூ­டாது என்றே குர்ஆன் கூறுகிறது...  அறி­வில்­லா­த­வர்­க­ளுடன்  விவாதம்  செய்­யக்­கூ­டாது என்றே குர்ஆன் கூறுகிறது... Reviewed by Madawala News on 7/11/2016 11:17:00 AM Rating: 5