Accaddemy

குளிக்க போய் சேற்றை பூசிக்கொண்ட மு கா தேசிய கொள்கைபரப்பு செயளாலர் முபீன் ...


(எஸ்.ஏ.அப்துல்லா - கல்முனை)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம், ஊடகவியலாளர்கள் சிலருக்கு சன்மானம் கொடுப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரே பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை ஊடகங்கள் விமர்சித்தமையால் றவூப் ஹக்கீம் பாரிய தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். 

இதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக சில ஊடகவியலாளர்களை வளைத்துப் போடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அப்படியும் மசியாத ஊடகவியலாளர்கள் ஓரிருவருக்கு எதிராக ஊடக நிறுவனங்களை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்தார்.

இவற்றையெல்லாம் செய்து கொண்டு, 'கூலிக்கு எழுதும் ஊடகவியாலளர்கள்' என்றும், 'கூலிக்காக எழுதும் பத்தி எழுத்தாளர்கள்' என்றும் தேசிய மாநாட்டிலும், சம்மாந்துறையிலும், ஒலுவிலிலும், குருணாகலிலுமாக பல இடங்களில் அநாவசியமான முறையில் பேசினார். 

அதாவது, தனக்கு எதிரான அரசியல்வாதிகள் காசு கொடுத்து ஊடகவியலாளர்களை இயக்குகின்றனர் என்று காண்பிக்க நினைத்தார். ஊடகவியலாளர்கள் மத்தியில் அவரது கருத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறிருக்கையில், 

அண்மையில் ஒரு பத்திரிகையில் அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் எழுதியிருக்கும் கட்டுரையில், '...பத்தி எழுத்தாளர்களில் சிலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்தித்து சன்மானங்களை பெறுவர். அவர்களின் பேனா அமைதியடையும். சுற்று காலங்கழிய அவர்களது பேனா பொங்கி எழும்...' என்று எழுதியுள்ளார். 


இதைவைத்து பார்க்கையில், அந்த சன்மானங்கள் ஒரு உதவியாக, அன்பளிப்பாக வழங்கப்பட்;டிருந்தால் அதிலிருந்து பிரதியுபகாரம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், கொள்கை பரப்புச் செயலாளரின் கருத்துப்படி, சன்மானம் பெறும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தமக்கு சாதகமாக எழுத வேண்டும் என மு.கா.கட்சியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ளார்கள் போல தெரிகின்றது. அப்படியென்றால் கூஜா தூக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் கூலி அல்லது கையூட்டல் என்று அதை சொல்லுவதே பொருத்தமாகும்.

தலைவர் ஹக்கீம் 'ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள்' என்று முழங்கிக் கொண்டிருக்க, (பணத்தையோ பொருளையோ) சன்மானமாக வழங்கும் அரசியல்வாதி தம்முடைய தலைவரே என்று, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். விளக்கம் எழுதப் போய், 'ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கொடுத்து எழுதத் தூண்டும் பழக்கம் யாருக்கு இருக்கின்றது' என்பதை விலாவாரியாக கூறி, தலைவரை மாட்டிக் கொடுத்திருக்கின்றார் என்றும் கூறலாம்.
குளிக்க போய் சேற்றை பூசிக்கொண்ட மு கா தேசிய கொள்கைபரப்பு செயளாலர் முபீன் ... குளிக்க போய் சேற்றை பூசிக்கொண்ட மு கா தேசிய கொள்கைபரப்பு செயளாலர் முபீன் ... Reviewed by Madawala News on 7/04/2016 08:13:00 PM Rating: 5