Kidny

Kidny

வலயக் கல்விப் பணிப்பாளரின் பாலியல் சேஷ்டைகளுக்கு கிழக்குமாகாண உயர் அதிகாரிகளே பொறுப்புதாரிகள்: கல்வியதிகாரிகள் தொழிற்சங்கம் அதிரடி அறிவிப்பு....


ஏ.எல்.எம். அஸ்லம்
சர்ச்சைக்குரிய திருகோணமலை மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் ஒருவரின் பாலியல் துஷ;ப்பிரயோக நடவடிக்கை தொடர்பான முழுப் பொறுப்பினையும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்குமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு என்பனவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பாவது..

சம்பந்தப்பட்ட கல்விப் பணிப்பாளர் அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றிய கல்வியலுவலகமொன்றில் இடம்பெற்ற தளபாட மோசடி தொடர்பாக ஆராய்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய மேலதிக விசாரணைக்காக குறித்த கல்விப் பணிப்பாளர் கல்வியமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டிருந்தார். பின்னர் இவர் கல்வியமைச்சு மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு என்பனவற்றில் கடமையாற்றும் தனது நண்பர்களின் ஒத்தாசையுடன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கல்வி வலயமொன்றுக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும் அவ்வலயத்தின் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களினது எதிர்ப்பின் காரணமாக மீண்டும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டார்.

இவ்வாறான நிலையில் சம்பந்தப்பட்ட கல்விப் பணிப்பாளர் மீண்டும் தன்னை வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியில் நியமிக்க வேண்டுமெனவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கான இணைப்பினை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்தார். இவ்வழக்கின்போது எக்காரணத்திற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மாகாணக் கல்வி அமைச்சுக்கு இணைக்கப்பட்டார் என்ற விடயத்தினை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவராமல் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி குற்றமற்றவர் போலவும் மாகாணக் கல்வியமைச்சு மற்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு குற்றமிழைத்துள்ளது போலவும் தெரிவித்து அக்கல்வி அதிகாரியுடன் சமரச உடன்பாட்டு நாடகமொன்றை நடத்தி மீண்டும் இவலை மூதூர் வலயத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாராக நியமிக்கப்பட்டார்.

இவர் ஏற்கனவே கடமையாற்றிய வலயத்தில் மேற்கொண்ட தளபாட மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிhராக குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட நிலையிலும் இவ்வதிகாரிக்கு கிழக்குமாகானக் கல்வியமைச்சு தொடர்ந்து தாபன நடைமுறைகளை மீறி இவர் விடயத்தில் இவருக்குச் சாதகமாக செயற்படுவதனால் இவர் தொடர்ந்தும் தேவையற்ற ஒழுங்கீனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு கல்விக்கென உரித்தாக்கப்பட்ட ஒழுக்க விழுமியங்களை கேள்விக் குறியாக்கி வருகின்றார் இதற்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சு உடந்தையாக இருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மேற்படி அதிகாரியினால் கிழக்கு மாகாணத்தின் பெண் ஆசிரியைகள் மற்றும் பெண் மாணவிகளின் கல்விமீதான  உரிமைகள் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முழுப் பெறுப்பினையும் கிழக்குமாகாண கல்வியமைச்சு மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு என்பனவற்றுடன் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதம சட்ட அதிகாரி என்பவர்களே பெறுப்பேற்க வேண்டும் எனவும் மேற்படி சங்கச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
வலயக் கல்விப் பணிப்பாளரின் பாலியல் சேஷ்டைகளுக்கு கிழக்குமாகாண உயர் அதிகாரிகளே பொறுப்புதாரிகள்: கல்வியதிகாரிகள் தொழிற்சங்கம் அதிரடி அறிவிப்பு.... வலயக் கல்விப் பணிப்பாளரின் பாலியல் சேஷ்டைகளுக்கு கிழக்குமாகாண உயர் அதிகாரிகளே பொறுப்புதாரிகள்: கல்வியதிகாரிகள் தொழிற்சங்கம் அதிரடி அறிவிப்பு.... Reviewed by Madawala News on 7/24/2016 12:04:00 PM Rating: 5