Oceas

கிழக்கு மாகாணக் கல்வியமைசு தமது அதிகாரத்தை சரியாக விளங்கிச் செயற்பட வேண்டும்- தொழிற்சங்கங்கள் கோரிக்கை...


ஏ.எல்.எம். அஸ்லம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள சம்மாந்துறை, கிண்ணியா, அம்பாறை ஆகிய கல்வி வலயங்களில் வெற்றிடமாகவுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கோரவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை கல்விநிரவாக சேவை சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை கல்விநிருவாக சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய வெற்றிடமாகவுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரி நியமனம் செய்யும் அதிகாரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாகாணக் கல்விச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மாகாணக் கல்விச் செயலாளர் இப்பதவிகளின் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த காலங்களில் இப்பதவிகளை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நிரப்பி பல்வேறு குழறுபடிகளை புரிந்தமையும் அதற்கொதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் பதியப்பட்டமை தொடர்பான நிகழ்வுகளும் உள்ளன.

சம்மாந்துறை, கிண்ணியா ஆகியவற்றுக்கான தகுதியானவர்கள் நியமிக்கப்படம்வரை கடமைபுரியும் அடிப்படையில் இரு கனிஷ;ட அதிகாரிகள் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விசேட ஆளணியை சேர்ந்தோராவர்.

தற்போது 2015 முதல் அமுலுக்கு வந்தள்ள இலங்கை கல்வி நிரவாக சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய வலயக்கல்விப் பணிப்பாளளர் பதவிக்கு தகுதி உள்ள உத்தியோகத்தர்கள் யார் என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கிண்ணியா, சம்மாந்துறை கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர்களாக உள்ளோர் இதன் அடிப்படையில் தகுதியற்றவர்களாகின்றனர்.

இதனால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இதே போன்று அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையிலான சேவை நீடிப்பு முடிவடைந்து விட்டது. அதற்கும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே வரத்தமானி மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் செயற்பட்டு கிழக்கு மாகாண கல்வியதிகாரத்தை காப்பாற்ற வேண்டுமென மேற்படி சங்கங்கள் கோரியுள்ளன.
கிழக்கு மாகாணக் கல்வியமைசு தமது அதிகாரத்தை சரியாக விளங்கிச் செயற்பட வேண்டும்- தொழிற்சங்கங்கள் கோரிக்கை... கிழக்கு மாகாணக் கல்வியமைசு தமது அதிகாரத்தை சரியாக விளங்கிச் செயற்பட வேண்டும்- தொழிற்சங்கங்கள் கோரிக்கை... Reviewed by Madawala News on 7/22/2016 02:35:00 PM Rating: 5