Free Space

பத்தாயிரம் விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவு - ஸ்ரீகொத அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜ.தே.க. சார்பாக போட்டியிடுவதற்கு இதுவரை விண்ணப்பித்துள்ள  பத்தாயிரம் விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதாக ஜ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.


ஜ.தே.கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்தின் கீழ்   இருபது இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மிக வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் தொழில் நுட்பம் ஊடாக கட்சி அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளும் முறையினை அண்மையில் ஜக்கிய தேசியக் கட்சி தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது .இதனூடாக இதுவரை முப்பதாயிரம் இளைஞர்கள் கட்சி அங்கத்துவத்தை பெற்றுள்ளதாகவும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் ஸ்ரீகொத அறிவித்துள்ளது.


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ள ஜக்கிய தேசியக் கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கான பல  வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீகொத அறிவித்துள்ளது.

எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி 

பத்தாயிரம் விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவு - ஸ்ரீகொத அறிவிப்பு பத்தாயிரம் விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவு - ஸ்ரீகொத அறிவிப்பு Reviewed by Madawala News on 7/04/2016 04:45:00 PM Rating: 5