இது சிங்கள பௌத்த நாடு ! சிங்களவர்களே இங்கு பிரதான இனம்..


நாட்டில் பிரதான இனம் மற்றும் மத தொடர்பான விடயங்களில் பெரும் சர்ச்சைகளில் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஆட்சியாளர்களை கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை அவர் பொய்பிரசாரம் என கூறுவதாக அஸ்கிரிரிய மஹாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற மஹாநாயக்க தேரரை கவுரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து கூறிய அவர்..

நாட்டில் பிரதான இனம் மற்றும் மத விடயங்களில் சர்ச்சைகளில் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஆட்சியாளர்களை கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை அவை பொய்பிரசாரம் என அவர்கள் கூறுகிறார்கள்.வீட்டுக்குள் கண்களை கட்டிக்கொண்டாலும் வெளியே வந்துதான் ஆடவேண்டும்.உண்மை ஒருநாள் வெளியே வரும்.

இந்த நாட்டில் மதத்துக்கு எதிராகவும் இனத்துக்கு எதிரான சக்திகள் வெளிக்கிளம்பும் சந்தர்பங்களில் அவைகளை முறியடிக்க பெளத்த மதகுருமார்கள் பின்னிற்க போவதில்லை என்பதற்கு இறந்த காலத்தில் உதாரணமாக திகழ்ந்துள்ளனர்.

இந்த நாடு ஒரு பௌத்த நாடு இங்கு சிங்களவர்களே பிரதான இனம் இது தவிர உலகில் சிங்களவர்களுக்கு என வேறு நாடு இல்லை. இந்த நாட்டில் ஆட்சியாளர்களின் நினைத்தது போல செயற்பட நாம் ஒருபோது இடமளிக்க மாட்டோம் என்பதை கூறிக்கொள்ளவிரும்புகிறோம். என குறிப்பிட்டார்.


இது சிங்கள பௌத்த நாடு ! சிங்களவர்களே இங்கு பிரதான இனம்.. இது சிங்கள பௌத்த நாடு ! சிங்களவர்களே இங்கு பிரதான இனம்.. Reviewed by Madawala News on 7/26/2016 08:24:00 AM Rating: 5