Oceas

கண்டி உக்குரஸ்ஸ பிட்டியவில் இடம்பெற்ற கரப்பந்தாட்டம் மற்றும் கரம் சுற்றுப் போட்டிகள்.



-அபூ மர்யம்.

உக்குரஸ்ஸ பிட்டிய மீராமத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு 2016.07.07ம் திகதி பகலிரவுப் போட்டியாக கரப்பந்தாட்டம் மற்றும் கரம் சுற்றுப் போட்டிகள் மிகுந்த கோலாகாலமாக நடைபெற்றது.

இநநிகழ்வானது பிரதேசத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு இதன் அனுசரனையாளர்களையும் பூரண திருப்திப்படுத்தியுள்ளது. இந்தப் பகலிரவு விளையாட்டு நிகழ்வானது பிரதேசத்தையும் தாண்டி இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும்,பரஸ்பர புரிந்துணர்வையும் விட்டுக் கொடுப்பையும் உண்டுபன்னுவதற்காக  இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகளை எதிர்காலத்தில் முன்னதை விடவும் மிகச் சிறப்பாக நடாத்த இதன் ஏற்பாட்டுக்குழு தலைவரும்,ரஉக்குரஸ்ஸ பிட்டிய மீரா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும், பொலீஸ் இன்ஸ்பெக்டருமான எச்.சிறாஜூதீன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

வெற்றியீட்டிய கழகங்களுக்கான கிண்ணங்கள் கல்லூரி அதிபர் ஜே.எம்.அஸ்ஹர் மற்றும் பழைய மாணவர் சங்கத் தலைவரும்,பொலீஸ் இன்ஸ்பெக்டருமான எச்.சிறாஜூதீன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது.

கண்டி உக்குரஸ்ஸ பிட்டியவில் இடம்பெற்ற கரப்பந்தாட்டம் மற்றும் கரம் சுற்றுப் போட்டிகள். கண்டி உக்குரஸ்ஸ பிட்டியவில் இடம்பெற்ற  கரப்பந்தாட்டம் மற்றும் கரம் சுற்றுப் போட்டிகள். Reviewed by Madawala News on 7/15/2016 11:22:00 AM Rating: 5