மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் இந்திய ஊடகங்கள் !



வங்கதேச தீவுரவாத தாக்குதலுடன் இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் ஷாகிர் நாயக் அவர்களை தொடர்புபடுத்தி  இந்திய பாரதீய ஜனதா கதை பரப்பி வரும் நிலையில் அதற்கு ஆதரவாக ஊடகங்களும் தீனி போட்டு வருகின்றன.

இந்த நிலையில் கஷ்மீரில் தனிநாடு கோரி போராடும் ஹிஷ்புல் முஜாகிதீன் அமைப்பின் முன்னணி உறுப்பினரான புர்ஹான் வாணி கடைசியாக வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியை வைத்து ஷாகிர் நாயக் மீது இந்திய ஊடகங்கள் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளன.

புர்ஹான் வானி தனது டுவிட்டரில் ஷாகிர் நாயக் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

புர்ஹான் வானியின் கடைசி டுவிட்டர் செய்தியை வாசித்தால் நீங்கள் அப்படியே ஷாக்காவிடுவீர்கள் என சில பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எங்கோ உள்ள ஒருவன் ஷாகிர் நாயக் அவர்களுக்கு ஆதரவு வழங்க கோருதில் ஷாகிர் நாயக் அவர்களுக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு அவர் மீது ஊடக போரும் துவக்கப்பட்டுள்ளது.
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் இந்திய ஊடகங்கள் ! மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் இந்திய ஊடகங்கள் ! Reviewed by Madawala News on 7/10/2016 12:54:00 PM Rating: 5