Wednesday, July 27, 2016

வவுணதீவு மக்களின் நீர் பிரச்சனைக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தொடர் முயற்சியினால் தீர்வு

Published by Madawala News on Wednesday, July 27, 2016  | மட்டு மாவட்டத்தின், வவுணதீவு பிரதேசத்தின் கன்னங்குடா, குருந்தியடி, காஞ்சிரங்குடா ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர்நிலைகளிலுள்ள நீர் வற்றியதனால் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர். ஒரு குட தண்ணீருக்காக காட்டுப்பகுதிகளின் ஊடாக பல கிலோ மீற்றர் தூரங்களுக்கு சென்று விஷ ஜந்துக்களிடம் தமது உயிரை பணயம் வைத்து தண்ணீரை பெற்று வரவேண்டிய நிலை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கிணறுகளுக்குள் நீர் வற்றியுள்ளமை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று பல தேவைகளை முன்வைத்து மக்கள் தாம் நீருக்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் முறையிட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த கடந்த 09.05.2016ஆந்திகதி திங்கட்கிழமையன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைவாக மனிதாபிமான உள்ளம் கொண்ட அரச சார்பற்ற தனி நபர்கள் மற்றும் சமூக சேவை உள்ளமுடைய அரேபிய நாட்டு தூதுக் குழு உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டி, நீர் வளமுள்ள இடங்களை அடையாலங்காண்டு இரண்டு இடங்களில் இரு கிணறுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான அடிக்கல்லும் நடப்பட்டு கிணறுகள் கட்டப்பட்டு 27.07.2016ஆந்திகதி புதன்கிழமை அப்பிரதேச மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இப் பெறுமதிமிக்க நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், அஷ்ஷேய்க். ஹாஸிம் சூரி JASKA அரேபிய நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர், செயலாளர் அதன் உறுப்பினர்கள், முன்னால் காத்தான்குடி நகர சபை தவிசாளர் மர்சூக் அஹமட்லெப்பை, மற்றும் ஊர் பிரமுகர்கள் என கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

வவுணதீவு பிரதேச மக்கள் நீரில்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக நிறுவனத்தினூடாக அதனை தீர்த்து வைப்பதற்கு இரண்டு கிணறுகளை நிர்மாணித்து கொடுத்திருக்கின்றோம். முதற்கண் இந்நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை நாம் செய்வதன் நோக்கம் ஒரு மனிதன் இன்னுமோரு மனிதன் கஷ்ட நிலையில் இருக்கும் போது அவனுக்கு செய்கின்ற ஒரு மனிதாபிமான செயற்பாடாகும். அதனடிப்படையில் இன்று நாங்கள் அவ்வாறான மானிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம். இந்நிறுவனமானது இறைவனின் பெரும் பொருத்தத்தினை மாத்திரம் எதிர்பார்த்து இவ்வாறன செயற்படுகளை செய்து கொண்டிருக்கின்றது.
எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் இன்னும் பல மனிதாபிமான அபிவிருத்தி திட்டங்களை நாம் இந்நிறுவனத்தினூடாக முன்னெடுக்க ஆலோசனைகளை செய்து வருகின்றோம். கடந்த காலங்கள் போன்று தமிழ் முஸ்லிம் சமூகம் என்று பிரிந்து வாழ்ந்த காலம்போய் இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை வலுப்படுத்த இவ்வாறான செயத்திட்டங்கள் இன ஒற்றுமை வெறும் வார்த்தைகளோடு நின்று விடாமல் இவ்வாறான செயற்றிட்டங்களூடாக இனமத வேறுபாடுகள் இன்றி இரு சமூகமும் நல்லதோர் புரிந்துணர்வுடனும், ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்பதாகும். எனவே இவ்வாறான சந்தர்பத்தினை நழுவ விடாமல் அனைவரும் பற்றிபிடித்து பாதுகாக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனதுரையில் தெரிவித்தார்.

M.T. ஹைதர் அலி


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top