Oceas

அரசாங்கத்தை கவிழ்ப்பது பெரிய விடயம் அல்ல !

இது சந்தேகநபர்களை குற்றவாளிகளாக்கும் யுகம் என்றும், யாரை வேட்டையாடினாலும், யாரை கைது செய்தாலும் தமது பயணத்தை நிறுத்தப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படும் பாதயாத்திரை கொழும்புக்கு வரும் என்றும், இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பது பெரிய விடயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். 

பெரிய சுறாக்களை பிடிப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதாக அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நாமல் என்பவர் சுறாவா என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார். 

அத்துடன் நாமல் கைது செய்யப்படுவதை தீர்மானிப்பது நாட்டின் பிரதமர் என்றும் இது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
அரசாங்கத்தை கவிழ்ப்பது பெரிய விடயம் அல்ல ! அரசாங்கத்தை கவிழ்ப்பது பெரிய விடயம் அல்ல ! Reviewed by Madawala News on 7/13/2016 05:11:00 PM Rating: 5