Yahya

தவம் #தவமிருந்தாலும் #அதாவின் #இடத்தினை #நெருங்க #முடியாது.


 Samzul A Rasheed

அண்மையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான தவம் அவர்கள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் இனி பாராளுமன்றம் செல்வது எட்டாக்கனி என்று கூறி அதாவுல்லாக்கு அழைப்பு விடுப்பது போன்று மக்கள் மணங்களில் அதாவுல்லா எனும் நாமம் வெந்தழலாய் புகையும் மக்களையும் லாவகமாக தான் சார்ந்திருக்கும் முஸ்லிம் காங்கிரசின் பக்கம் வருமாறு சுசகமாய் அழைத்து இருக்கிறார். 

உண்மையில் தவம் அவர்கள் அதாவுக்கு பாராளுமன்றம் எட்டாக் கனி என்கிற விடயம் தொடர்பில் முஸ்லிம்களின் கழாகத்ர் செயற்பாட்டையும் மிஞ்சும் வண்ணம் தன்னை காட்ட முனைவதோடு தான் மேடைகளில் முனுகும் மந்திரத்திலும் ஐயம் தோன்றியுள்ளதோ என்னும் கேள்வியும் எழுகிறது ( ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பவன் இறைவன் என்பது )  

மேலும் தவம் அவர்கள் கூறியிருக்கிறார்கள் மஹிந்தவின் கொஞுங்கோல் ஆட்சிக்குப் பின்னால் இருந்து கொண்டுதான் வெற்றிபெறுவேன் என்ற என்று அதாவின் சொல்லியிருந்தார் ( ஊர் என்னொடுதான்) ஆனால் மக்களால் தொற்கடிக்கப்பட்டிருந்தார். என்பதும் உண்மையில் ஒன்றை விளங்க வேண்டும் மஹிந்தவின் அரசில் தான் சார்ந்த கட்சித்தலைவரும் இன்னோர்ரென்ன அரசியல் அதிகாரம் படைத்தோரும் மஹிந்தவின் முந்தானையில் தொங்கிக்கொண்டும். மஹிந்தவின் பின்கதவால் சந்தித்து விட்டு முன்கதவால் வந்தவர்கள் போன்று மக்கள் மத்தில் அதா அவர்கள் கபட நாகமாடவில்லை.  மஹிந்தவின் அரசின் ஓர் சிற்றரசன் போல் இருந்தார் மற்றவர்கள் போல் எழும்புத்துண்டுகளுக்காய் இழுபடவில்லை.  இதனால் தான் நன்றிக்கடன் செலுத்தவே இறுதிவரை மஹிந்தவுடன் இருந்தார்.  இதற்கு மக்கள் தக்க பாடமும் புகட்டியும் விட்டனர். 

மேலும் மஹிந்தவின் அரசை விட்டு வெளியறியவர்கள் அதாவுல்லாஹ் வெளியேறவில்லை என்று மார்புதட்டவும் நீங்கள் நியாயம் கற்பிக்கவும் முடியாது அவ்வாறு நியாயம் கற்பிக்க முனைந்தால் அமைச்சர் ரிசாத்தினையும் அவரது கட்சியினையும் நியாயம் கற்பியுங்கள் காரணம் மக்களின் தேவைப்பாட்டுக்காக வெளியேறினார்கள் தபால்வாக்களித்த பின்பு மாறவில்லை என்பதும் ஞாபகமிருக்கும் என்றும் நினைக்கிறோம். 

மஹிந்த அட்டூழியங்களுக்கும் அராஜகங்களுக்கும் அதாவுல்லா மட்டும் தானா மௌனம் காத்தார் மற்றவர்கள் என்ன செய்தார்கள் எளிமையாக ஒன்றை ஒப்புவிக்கிறேன். கசினோவை இலங்கையில் கொண்டு வருவதுக்கு எல்லா முஸ்லிம் அரசியல் அதிகாரம் படைத்தோர்கள் ஒப்புதல் வழங்கினார்களே அப்போதும் தாங்கள் எங்கே? ?? கசினோக்கு எதிர்த்த யார் சிங்களவர்களே தவிர நம்முஸ்லிம் அரசியல்வாதிகளல்ல.  

நீங்கள் இன்று அதாவுல்லாக்கு நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறீர்கள் அதற்கு உங்கள் தலைமை விரும்புமா??  

காரணம் அதாவுல்லா எனும் மாபெரும் அரசில் அதிகாரத்தை இழந்து கிடக்கும் அக்கறைப்பற்றினை அதா இடத்திற்கு இனித்தவம் என்ற நாமமும் மரம் எனும் வேரும் ஊண்றப்பட வேன்றும் என்று உங்கள் தலைமை நினைக்கவில்லை அவ்வாறு நினைத்திருந்தார் நீங்கள் இன்று கிழக்கு  சுகாதார அமைச்சராகவோ அல்லது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உருப்பினராகவோ இருந்திருக்க முடியும். இது நடக்கவில்லையே அப்போ அக்கறையூர் உங்கள் தலைமைக்கும் கணக்கும்  இல்லை நீங்களும் ஓர் பகடக்காயாகவே உங்கள் தலைமைக்கு தோற்றப்படுகிறீர்கள் போல.

மக்களின் அதிகாரம் மறுக்கப்பட்ட அதாவுல்லாஹ்வை கட்சிக்கும் அழைத்து உங்கள் நேரங்களை வீணாக்கள் மக்கள் பொன்னான வாக்குகள் மூலம் ஆனைபெற்று அரசியல் அதிகாரத்துடன் செயற்படும் நீங்கள் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் நிறைவேற்ற முனைப்புடன் செயற்படுங்கள்.  இல்லையேல் அதிகாரம் வழங்கிய மக்களால் முன்னாள் மாகாண பை உருப்பினர் என்று உச்சரிக்கப்பட்டுவிடக்கூடும். 

அரசியல் அதிகாரத்திற்கும் பதவிக்கும் அதாவுக்கு அழைப்புவிடுக்கிறீர். ஆட்சியையும் அதிகாரத்தையும் வழங்குபவன் இறைவன் இதையும் மறக்காதீர்.

தவம் #தவமிருந்தாலும் #அதாவின் #இடத்தினை #நெருங்க #முடியாது. தவம் #தவமிருந்தாலும் #அதாவின் #இடத்தினை #நெருங்க #முடியாது. Reviewed by Madawala News on 7/10/2016 12:40:00 AM Rating: 5