Wednesday, July 13, 2016

நாட்டில் தற்போது தோன்றியிருக்கும் இனவாத சூழல் தொடர்பான தேசிய ஷுரா சபையின் முக்கிய தீர்மானங்கள்

Published by Madawala News on Wednesday, July 13, 2016  | 

2016 ஜூலை 11 ஆம் திகதி அன்று தேசிய ஷுரா சபையின் அங்கத்துவ அமைப்புகளுடனான விஷேட சந்திப்பின் போது நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு பின்வரும் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கப்பட்டன :

  1. முஸ்லிம்களது மனதைப் புண்படுத்தும் அவர்களுக்கெதிரான விஷமப் பிரசாரங்களும் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் மதங்களுக்கெதிரான இனவாத மதவாத செயற்பாடுகளும் மீண்டும் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் நாட்டின் சகல குடிமக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழும் ஒரு சூழலை உருவாக்கும் மற்றும் அதனை ஊர்ஜிதப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது என்பதை தேசிய ஷூரா சபை வலியுறுத்த விரும்புகிறது.

  2. அரசியல் யாப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதுபோல அரசாங்கமும் நீதி மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள  பொலிஸ் போன்ற அரச நிறுவனங்களும் நாட்டின் சகல பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். மேலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும்  விடயத்தில் எவ்வித அச்சமோ  பாரபட்சமோ இல்லாமல் நடந்து கொள்ளவதும் அவசியமாகும்.

  3. இது தொடர்பாக ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிரிசேன, கெளரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கமுஸ்லிம் அரசியல்வாதிகள்பாதுகாப்பு செயலாளர் மேலும் அதிகரித்து வரும் இன மற்றும் மத விரோத சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க பாடுபட்டு வரும் தன்னார்வக் குழுக்கள் போன்றோரை சந்தித்து அதிகரித்துவரும் இனவாதம் மற்றும் மதரீதியான வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தேசிய ஷூரா சபை தீர்மானித்துள்ளது.

  4. தற்காலத்தில் தலைதூக்கியிருக்கும் பண்பாடற்ற இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் மறைவான ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கலாம் என தேசிய ஷூரரா சபை  கருதுவதுடன் அவற்றின் மூலம் அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்து, தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டுவரும் நோக்கமும் அதற்குள் அடங்கியிருக்கலாம் என தேசிய ஷூரா சபை சந்தேகிக்கின்றது.

  5. இதேவேளை ஊடக தர்மத்தைப் பேணிக்கொள்வதிலும் அதற்கான ஒழுக்க விழுமியங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதிலும் சகல வகையான ஊடகங்களுக்கும் அதிமுக்கிய பங்கு உண்டு எனவும் தேசிய ஷூரா சபை நம்புகின்றது.

  6. இதேவேளை சிங்கள சமூகத்திலுள்ள ஒரு சிலரது மோசமான நடவடிக்கைகளைப் பொருத்தவரையில் பண்பாடான மரியாதைக்குரிய பெரும் எண்ணிக்கையிலான சிங்கள மக்களை அவை எந்தவகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை ஷூரா சபை நன்கு உணர்ந்துள்ளது. ஒரு சில பெளத்த மதகுருக்களது மோசமான நடவடிக்கைகள் முழு பெளத்த பிக்கு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தமாட்டாது  என்ற உண்மையயும் அது விளங்கிவைத்துள்ளது.

  7. எனவே தீய சக்திகளின் தூண்டுதல் மற்றும் தந்திரங்களுக்குள் சிக்க வேண்டாம் என்றும் பொறுமையை கடைபிடிக்கமாறும் விட்டுக் கொடுத்து நடக்குமாறும் முஸ்லிம்களை தேசிய சூரா சபை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. இஸ்லாம் என்பது அமைதியையும் அன்பையையும் வலியுறுத்தும் சாந்தி மார்க்கம் ஆகும் என்பதையும் அது முஸ்லிம்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது.

  8. இந்த அசாதாரண சூழலை கையாழுவதற்கும்  பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசு காண்பதற்கு உதவும் வகையிலும் இஸ்லாத்தையும்முஸ்லிம்களையும் பற்றிய தவறான செய்திகளையும் பிழையான கருத்துக்களையும் தெளிவுபடுத்துவதற்குமான ஒரு பிரத்தியேகமான பிரிவை அமைப்பது பற்றிதேசிய ஷூரா சபை ஆராய்ந்து வருகின்றது. இது பரஸ்பர புரிந்துணர்வும் சமாதான சகவாழ்வும் எற்பட வழிவகுக்கும்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top