Free Space

மாகாண சபை உறுப்பினர் எம் எல் .ஏ .அமீருக்குஎதிராக தேசிய காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை


 

தேசிய காங்கிரஸ்  அங்கத்தவராக  வெற்றிலைசின்னத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான மாகாண சபை உறுப்பினர் எம் .எல். ஏ அமீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் கடந்த கால அரசியல்  நடவடிக்கைகள் தேசிய காங்கிரசின் யாப்பின் படி அக்கட்சியின் அங்கத்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளதாகவும்  வரும் 2016.08.04 வியாழக்கிழமை பி .ப  3.30 மணிக்கு தேசிய காங்கிரசினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய ஒழுக்காறு குழு முன்னிலையில் சமூகமளிக்குமாறு தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளரினால் எம் .எல்.ஏ அமீர் அவர்களுக்கு பதிவுத்தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

எதிர்காலத்தில் தேசிய காங்கிரசின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்சியின் ஒழுக்க விதிமுறைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய காங்கிரஸின்  உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் .
மாகாண சபை உறுப்பினர் எம் எல் .ஏ .அமீருக்குஎதிராக தேசிய காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை  மாகாண சபை உறுப்பினர் எம் எல் .ஏ .அமீருக்குஎதிராக தேசிய காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை Reviewed by Madawala News on 7/29/2016 03:22:00 PM Rating: 5