Accaddemy

ஞானசார தேரர் விவகாரம் ! முஸ்லீம் பிரதினிதிகள் பாதுகாப்பு செயளாலர் சந்திப்பு...


பாதுகாப்பு செயலரிடம் முன்வைப்பு
புனித குர்­ஆ­னையும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்மத் நபி­யையும் நிந்­தித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல நீதி­மன்­றங்­களில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 48 வழக்­கு­களின் விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்­தும்­படி பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சி­யிடம் முஸ்லிம் அமைப்­பு­களும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

புனித குர்ஆன் அவ­ம­திக்­கப்­பட்­ட­மையும் அல்­லாஹ்வும் முஹம்மத் நபியும் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­மையும் எந்­த­வொரு முஸ்­லிம்­க­ளாலும் சகிக்க முடி­யாது.

முஸ்­லிம்கள் பொறுமை காக்­கி­றார்கள். ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய உரையில் அளுத்­கம கல­வரம் மீண்டும் தேவையா என்று வின­வி­யி­ருக்­கிறார்.

எனவே மீண்டும் இன­வன்­மு­றைகள் தோன்­றா­தி­ருக்க ஞான­சார தேரர் விசா­ரிக்­கப்­பட்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. 

மத்­திய மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் அசாத்­சாலி ஞான­சார தேரரின் மஹி­யங்­கனை உரை­யி­னது வீடியோ பதிவு நாடா­வையும் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் கைய­ளித்தார்.


நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக ஞான­சார தேரர் கருத்­துக்­களை ஊட­க­மா­நா­டு­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வெளி­யிட்டு வரு­வ­தா­கவும் இன முரண்­பா­டு­களைத் தோற்­று­விப்­ப­தா­கவும் முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் தெரி­வித்­தனர். 

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் விசா­ர­ணையின் கீழ் இருக்­கின்­றன. நாட்டில் அமு­லி­லுள்ள சட்­டங்கள் அனை­வ­ருக்கும் சம­மா­னதே. இன நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மான செயற்­பா­டுகள் மதங்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்கள் வெறுப்புப் பேச்சு அச்­சு­றுத்­தல்கள் என்­ப­வற்­றுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி உறு­தி­ய­ளித்தார். 

பாது­காப்பு செய­லா­ளரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், அசாத் சாலி, ஹல்மி அஹமட், எம்.எஸ். எம். தாஸிம் மௌலவி முர்ஷி முளப்பர், ஹுசைன் பைலா, அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

ஞானசார தேரர் விவகாரம் ! முஸ்லீம் பிரதினிதிகள் பாதுகாப்பு செயளாலர் சந்திப்பு... ஞானசார தேரர் விவகாரம் ! முஸ்லீம் பிரதினிதிகள் பாதுகாப்பு செயளாலர்  சந்திப்பு... Reviewed by Madawala News on 7/13/2016 01:53:00 PM Rating: 5