Accaddemy

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் ‘ஸ்லீப்பர்’ செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது...


ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் ‘ஸ்லீப்பர்’ செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக இந்தியாவிற்கான ஈராக் தூதர் பக்ரி ஹசன் அல்இஸா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.  

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாடுகளில் ஒன்றான ஈராக்கின் இந்திய தூதர் பக்ரி ஹசன் அல் இஸா ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “அயல்நாட்டு நிதிஉதவி பெறும் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள் மற்றும் மதபோதகர்களின் தனிப்பட்ட கருத்தியல் கொண்ட இஸ்லாத்தின் காரணமாக இந்தியாவில் ஐஎஸ் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளார். இந்தியாவில் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள் மற்றும் மத போதகர்கள் எந்த வகையான இஸ்லாத்தினை போதிக்கின்றனர் என்பதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறிள்ளார். 

மேலும் கருத்து கூறியுள்ள அவர்..
“இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் அயல்நாட்டு நிதிஉதவிகளுடன் நடைபெறும் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள், கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட இஸ்லாம் போதிக்கப்படுகிறது. இதுதான் ஐஎஸ் அமைப்பின் எழுச்சி மற்றும் பரவலுக்கும் காரணமாகிறது. இதுபோன்ற பயிற்சியானது ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாளர்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவிலும் இத்தகைய இஸ்லாமியத்தை போதிக்கும் சக்திகள் உள்ளது, இயங்குகிறது என்பதை என்னால் கூறமுடியும்.

இந்த புதிய வகையிலான இஸ்லாமிய பள்ளிகளால், இஸ்லாம் அதன் பாரம்பரியமான மனிதநேய, சகிப்புத்தன்மை மரபுகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்கிறது. இஸ்லாமிய கலந்துரையாடல் மற்றும் தொலைக்காட்சி மதபோதகர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடுத்துள்ள போரில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவேதான் இதுபோன்றோர் மீது நாடுகள் கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் ‘ஸ்லீப்பர்’ செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது... ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் ‘ஸ்லீப்பர்’ செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது... Reviewed by Madawala News on 7/14/2016 06:58:00 PM Rating: 5