Oceas

சர்சைக்குறிய பாகிஸ்தான் நடிகையை கொன்ற சகோதரன் கைது !


பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச் தனது சகோதரரால் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி சகோதரன் வசீம் என்பவரை பாகிஸ்தான் பொலீசார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிர்ந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச்.சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

தன்னை தற்கால நவீன பெண்ணியவாதியாக வர்ணித்துக் கொண்ட அவருடைய நடவடிக்கைகளுக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புக் வெளியிடப்பட்டது.

கடந்த இருபது இருபது உலக கிண்ண போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனமாடுவதாக சவால் விட்ட அவர் ..

பாகிஸ்தானின் முக்கிய மதகுருக்களில் ஒருவரான முஃப்தி குவாவி உடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானதை தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார் கந்தீல் பலூச்.

அந்த சம்பவத்தின் விளைவாக மதகுருவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.

கந்தீல் பலூச் குரல்வளையை அவருடைய சகோதரர் நெரித்துக் கொன்றதாக போலீசார் குறிப்பிட்டுள்ளதுடன் அவரை கைது செய்து விசாரதித்து வருகின்றனர்.

சர்சைக்குறிய பாகிஸ்தான் நடிகையை கொன்ற சகோதரன் கைது ! சர்சைக்குறிய பாகிஸ்தான் நடிகையை கொன்ற சகோதரன் கைது ! Reviewed by Madawala News on 7/17/2016 02:41:00 PM Rating: 5