Ad Space Available here

கிழக்கின் எழுச்சித் தலைவர் வபா பாரூக் அவர்களுக்கு வாழைச்சேனை பைரூஸிடமிருந்து திறந்த மடல்


உங்கள் வயதிலும்  அறிவினதும் அனுபவத்தினதும் எல்லையை கூட வெகு தூரத்தில் இருந்து எட்டிப் பார்த்தவனாய் இருக்கும் நான் உங்களுக்கு மடல் எழுதுவதற்கு தகுதியானவனா என்று நான் அறியேன்.......?

இருந்தும் எழுத வேண்டிய சூழ் நிலையில் மௌனம் காக்கவும் முடியாத காரணத்தினால் என் பேனா முனை உங்களை நோக்கி திருப்பப் படுகின்றது
 

இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியலில் தற்போது அனைவரினதும்  நாமத்திலும் பேசு பொருளாக இருக்க கூடிய விடயமென்றால் அது நீங்கள் உருவாக்கிய கிழக்கின் எழுச்சி என்ற நாமம் தான் என்பதில் எந்த வீத மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை

கிழக்கின் எழுச்சியின் ஸ்தாகத் தலைவராக இருக்க கூடிய நீங்கள் கிழக்கின் எழுச்சி என்ற நாமத்தை ஊடகங்களுக்கு பிரதிபலிப்பதற்கு முன்னர் நீங்கள் யார் உங்கள் கடந்த கால அரசியல் வகிபம்  என்னவென்பதை யெல்லாம் மக்களுக்கு எடுத்து கூறவில்லை  என்று நினைக்கின்றேன் ஏனெனில்    அநேகருக்கு உங்களை பரீட்சாத்தியமில்லாமல் இருப்பதாலயே இதனை எடுத்துக் கூறுகிறேன்

அதிகமான மக்களிடதில் அறிமுகமில்லாத நீங்கள் தன்னைத் தானே கிழக்கின் எழுச்சி தலைவர் என்று பிரகடனப்படுத்துவதால் நீங்கள் தற்போது மக்களிடத்தில் அறிமுகமாகின்றீர்களே தவிர உங்கள் எழுச்சி வெற்றி பெறும் என்பது பகல் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகவே தென்படுகின்றது

நீங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் கட்சியின் பொருளாளராக அங்கம் வகித்ததாகவும் கட்சியின் தலைமக்கு எதிராக நீங்கள் செயற்பட்டதாகவும் அதனால் நீங்கள் கட்சியை விட்டு மறைந்த பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலத்திலயே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அலசலும் பரசலுமான ஒரு புரலி ஊடகங்கள் மூலமாக என்னல் கிடைக்கப் பெற்றது இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றதென்பதை நீங்கள் எடுத்துக் கூறியே ஆக வேண்டும்

கிழக்கின் எழுச்சியின் "கருப் பொருள்" ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கிழக்கிற்கு மாற்றப் பட வேண்டும் என்பதல்லவா உண்மையில் உங்கள் கோரிக்கையில் ஒரு பக்கம் நியாயம் இருந்தாலும் அந்த பதவிற்கு தகுதியான அரசியல் வாதி கிழக்கிலங்கையில் யார் இருக்கின்றார் என்பதை பிரகடனப்படுத்த உங்களால் முடியுமா...?  ஏனெனில் உங்கள் கோரிக்கையை மக்கள் முன் எடுத்து வைத்து எதிர்வரும் காலங்களில் தேர்தல் மூலம் தலைமைத்துவத்தையும் கட்சியின் பிரதிநிதிகளையும் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்து விட்டால்  தலைமைத்துவத்துக்கான போட்டி  உங்கள் கிழக்கின் எழுச்சி உறுப்பினர்களுக்கிடையிலயே நிலவாது என்று என்ன உத்தரவாதம்...?

ஆகவேதான் அதற்கு தகுதியான தலைவரை மக்கள் முன் பிரகடனப்படுத்தி உங்கள் கோரிக்கையை முன் வைப்பதுவே மக்களை குழப்பதில் இருந்து அகற்றி  எதிர் காலத்தில் கட்சியையும் பாது காப்பதற்கான சிறந்த உத்தியாக நான் கருதுகின்றேன்

நடை உடை  பாவனையில் நபி (ஸல்) அவர்களின்  சுன்னாவை பின்பற்றுகின்ற உங்களுக்கு இஸ்லாத்தின் பார்வையில் தலைமைத்துவம் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன்  ஆனால்  கிழக்கின் எழுச்சி என்ற கோஷத்தினூடாக 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைமைத்துவத்தை கிழக்குக்கு வழங்க வேண்டும் என்று துடிக்கும் நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்

இக் கட்சியின் ஸ்தபாகத் தலைவர் மறைந்த பிற்பாடு இக்கட்சியிலிருந்து முகவரி பெற்ற பலர் இக் கட்சியின் தலைமைத்துவத்தின் மீது நப்பாசை கொண்டு தனது ஆசை நிறைவேறாத விடுத்து கட்சியின் தலைமையின் மீது காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து கட்சியிலிருந்து வெளியேறிச் சென்று கட்சிக்கெதிராகவும் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் போர்க் கொடி தூக்கியவர்களைப் பற்றி தாங்கள் அறியாமல் ஒன்றுமில்லை

அவர்கள் இன்று தேசிய அளவிளான கட்சியை அமைத்துக் கொண்டு அரசியல் அதிகாரங்களுடனும் மக்கள் செல்வாக்குடனும் வளம் வந்து கொண்டு கட்சியின் தலைமைக்கெதிராக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு வகையில்  தனது ஆதங்கத்தையும் காழ்ப்புணர்வுகளையும் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் அவர்களால் கூட இன்று வரை தலைமைத்துவத்தை கைப்பற்ற முடியாமல் இருக்கும் போது எந்த வீத அரசியல் அதிகாரமுமின்றி கிழக்கு மாகணத்தை மாத்திரம் மையப்படுத்தி கோரிக்கை முன் வைக்கும் உங்களால் மாத்திரம் இது எந்த அளவக்கு சாத்தியப்படும் என்று நினைக்கின்றீர்கள்....?

கிழக்கு மண்ணுக்கே அப் பதவி வழங்க வேண்டும் என்று நீங்கள் வைக்கும் கோரிக்கையானது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பிரதேச வாதத்தை தூண்டும் விதமாகவே அமைந்துள்ளது இந்த கட்சியானது ஒரு தனி மனிதனின் பதவி மோகத்துக்காகவோ  ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவோ ஒரு மாகணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்காகவோ மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல மாறாக அது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமைகளையும் தேசியம் முதல் சர்வதேசம் வரை கொண்டுவருவதற்கான உத்தியாகவே உருவாக்கப்பட்டது என்பதை கூடவா நீங்கள் அறியாமல் இருக்கின்றார்கள் என்ற வினா எனக்குள்ளயே எழும்புகின்றது....?

நீங்கள் தலைமைத்துவத்தின் மீது வைத்துள்ள குற்றாச்சாட்டுகளை மையப்படுத்தி தலைமைத்துவத்தை கிழக்கு மாகணத்துக்கே கோராமல் "தலைமைத்துவத்தில் மாற்றம்  வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தாலும்  நடுநிலையாக சிந்திக்க கூடியவர்களாவது உங்கள் பக்கம் சாய்ந்திருப்பார்கள்

"நம் விதியை நாமே தீர்மானிப்போம்" 
என்ற உங்கள் கருப்பொருளானது எம் மார்க்கத்துக்கு எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை நீங்கள் அறியாமலிருப்பது கவலைக்குறிய விடயமே உங்களுடைய இந்த அறியாமையை நிச்சயம் படித்த சமூகத்திடத்தில் ஒரு பீதியை கிழப்பியிருக்கும் என நினைக்கின்றேன்

நாட்டில் தற்போது  இனவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்ற சுழ் நிலையில்  
தலைமைத்துவத்தின் மாற்றத்தை விரும்புவதை விட தலைமைத்துவத்திடம் இருக்கும் தவருகளை முன்னெடுத்து அதனை சரி செய்வதே  ஆரோக்கியமாக அமையக் கூடும்   ஏனெனில் பதவி மோகத்தினால் எதிர்காலத்தில்  கட்சியானது சுக்கு நூறாகி போய்விடக் கூடாது என்பதற்காகவே இதனை வலியுறுத்திக் கூறுகிறேன்

எது எதுவாக இருந்தாலும் "அரசியல் என்றால்" சாத்தியம் இல்லாததை சாதித்து காட்டும் உத்தியே என்பார்கள் அதனை சாதித்து காட்டும் சாணக்கியனாக மக்கள் முன் எதிர் காலத்தில்  நீங்கள் வளம் வருவீர்களா அல்லது உங்கள் கிழக்கின் எழுச்சி என்ற நாமத்தீனூடாக பிரபலமானவராக முன் வருவீர்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் 
வை.எம். பைரூஸ்
வாழைச்சேனை

கிழக்கின் எழுச்சித் தலைவர் வபா பாரூக் அவர்களுக்கு வாழைச்சேனை பைரூஸிடமிருந்து திறந்த மடல் கிழக்கின் எழுச்சித் தலைவர் வபா பாரூக் அவர்களுக்கு வாழைச்சேனை பைரூஸிடமிருந்து திறந்த மடல் Reviewed by Madawala News on 7/25/2016 09:26:00 AM Rating: 5