Accaddemy

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட புதிய பீடாதிபதித் தேர்தல் : புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எல் பௌசுல் அமீர் அமோக வெற்றி.


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாக அப்பல்கலைக்ழகத்தின் புவியியல் துறைத்தலைவராகக் கடமையாற்றிய ஜனாப் எம். எல் பொசுல் அமீர் அவர்கள் அண்மையில் (12) பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். எம்.எம்.நாஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டியதன் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் இத்தேர்தலில் போட்டியிட்ட அரசியல் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்களன ஜனாப் எஸ். எம். ஆலீப் மற்றும் எம். ஏ. ஜப்பார் என்பவர்களைப் பின்தள்ளி இவர் கலைப்பீட விரிவுரையாளர்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாப் பௌசுல் அமீர் அவர்கள் ரோதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல்பாட இளமாணியும் முதுதத்துவமாணியுமாவார். மேலும் இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவருமாவார். தென்கிகழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான இவர் புவியியல் தொடர்பான தொடர்தேர்ச்சியான ஆய்வாளர் என்பதுடன் பல்வேறு சர்வதேச ஆய்வரங்குகளில் புவியியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்தும் வருகின்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடம் புதிய பீடாதிபதியிலிருந்து புதிய பரிநாமம் நோக்கி வளர்ச்சியடையும் என பல்கலைக்கழக கல்வியியல் சமூகம் எதிர்பார்ப்பதுடன் இவர் இப்பல்கலைக்கழகத்தின் ஆறாவது பீடாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதிய பீடாதிபதியாக பௌசுல் அமீர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவர் வகித்த புவியியல் துறைத் தலைவர் பதவிக்கு அப்பல்கலைக்கழக சிரிஷ்டி கர்த்தாக்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம்.ஐ.எம் கலீல் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களினால் உடன் அமுலுக்குவரும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமது இளநிலை மற்றும் முதுநிலைப்பட்டங்களை கற்றுத்தேறியவர் என்பதுடன் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமது கலாநிதிப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளதுடன் நாடறிந்த ஒரு புவியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஏ.எல்.எம் அஸ்லம்
 
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட புதிய பீடாதிபதித் தேர்தல் : புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எல் பௌசுல் அமீர் அமோக வெற்றி. தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட புதிய பீடாதிபதித் தேர்தல் : புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எல் பௌசுல் அமீர் அமோக வெற்றி. Reviewed by Madawala News on 7/14/2016 09:26:00 AM Rating: 5