Oceas

நாடு பாரிய நிதி நெருக்கடியை நோக்கி செல்கிறது !


மொஹொமட் ஆஸிக்
நாட்டில் தற்போது பாரிய அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று 6 ம் திகதி மாலை பூஜாபிட்டிய பீல்ட் வீவ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர் இவ்வாறும் கூறினார்.

இன்று நாட்டில் பல சாரார் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டுள்ளனர். பல்கலைகழக மாணவரகள், வியாபாரழகள் வைத்தியர்கள் பொது மக்கள் என ஆர்ப்பாட்டம் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்று காரணம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகும் என்பதே உன்மை.

மஹிந்த ராஜபகஷ அரசின் போது நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்த பொதும் அதனை இல்லாமலாக்குவதற்கு கொண்டுவரப்பட்ட ரணில் மைத்திரி கூட்டு அரசும் அவ்வாரே நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி ஆரம்பித்த 2005 ம் ஆண்டாகும் போது நாட்டின் கடனாக இருந்தது 2500 பில்லியன் ரூபாவாகும். அது 2015 ஆகும் போது 10,500 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. மஹிந்த ராஜபக்ஷ தனது காலத்தில் 8000 பில்லியன் ரூபாய் கடனாகக் பெற்றுள்ளார்.

அதில் அவரது காலத்தில் செய்த அபிவிருத்தி வேலைகள் அனைத்தையும் கனக்கிட்டாலும் 1000  பில்லியன் அளவில்தான் ஆகும். மிகுதிப்பனத்திற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி தேட வேண்டும்.

நாட்டில் கடன் அதிகரித்து வரும் நிலையில் வருட வருமானம் கடனுகாக போதாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டின் அன்றாட செலவுகளுக்கு மீண்டும் மீண்டும் கடன் பெற்றக் கொண்டுள்ளனர். இந் நிலையில் நாடு நாலுக்கு நாள் பாதாலத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இந் நிலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மக்கள் விடுதலை முன்னனிக்கு மட்டுமே முடியும். நாங்கள் ஆட்சியில் இருந்தால் இந் நிலையில் என்ன செய்வோம் என்பதைப் பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் ஆட்;சியில் இருந்தால். முதலில் வீன் விரயங்களை இல்லாமல் ஆக்குவோம். தேவையற்ற செலவுகளை குறைப்போம். அடுத்தாக, நாட்டின் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிப்போம். நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை நாட்டில் இயன்ற அளவு உற்பத்தி செய்து அத்தியாவசிய தொகையை மற்றும் இறக்கமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் இங்கு தெரிவித்தார.



 
நாடு பாரிய நிதி நெருக்கடியை நோக்கி செல்கிறது ! நாடு பாரிய நிதி நெருக்கடியை நோக்கி செல்கிறது ! Reviewed by Madawala News on 7/08/2016 12:51:00 AM Rating: 5