Accaddemy

எதுவித தடைகள் வந்தாலும் எமது பயணத்தை தொடருவோம் ...


எதுவித தடைகள் வந்தாலும் கூட்டு எதிர்கட்சி நாளை முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரையை முன்னெடுக்க தாம் உறுதிபூண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று கண்டியில் சமய வழிபாடுகளை முடித்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்...

நாட்டில் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் அனைத்தை இன மக்களும் இன பேதங்களை மறந்து இந்த பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாளைய கூட்டு எதிர்கட்சி பாதயாத்திரையில் கண்டி, மாத்தளை , குருநாகல் நுவரெலியா ஆகிய மாவாட்டங்களில் இருந்தும் கூட்டு எதிர்ப்பு ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை பேருவளை நகரில் இருந்து நாளைய கண்டி ஊர்வலத்தில் கலந்துகொள்ள மூன்று பஸ்வண்டிகளில் முஸ்லீம்கள் தயாராகவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர் இருவர் குறிப்பிட்டார்.


எதுவித தடைகள் வந்தாலும் எமது பயணத்தை தொடருவோம் ... எதுவித தடைகள் வந்தாலும் எமது பயணத்தை தொடருவோம் ... Reviewed by Madawala News on 7/27/2016 10:19:00 PM Rating: 5