மதீனா தற்கொலை குண்டுத் தாக்குதலில் நால்வர் பலி !


மதீனாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதல் என  சவுதி உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.

தாக்குதலின் இலக்கு சவுதி காவற்துறையினரே என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது.

குறித்த சம்பவம் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்த எரிவாயு சிலிண்டரே வெடித்ததாகவும் தகவல்கள் பரவியிருந்த நிலையில் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள உள்துறை அமைச்சு குறித்த சம்பவம் தற்கொலைத் தாக்குதலே என உறுதி செய்துள்ளது.

அதேநேரம் முன்னதாக ஜித்தா அமெரிக்க துனை தூதரகம் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியவன் அப்துல்லா கல்சர் கான் எனவும் அவன் சவுதியில் 12 வருடங்களாக வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை என சவுதி உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மதீனா தற்கொலை குண்டுத் தாக்குதலில் நால்வர் பலி ! மதீனா தற்கொலை குண்டுத் தாக்குதலில் நால்வர் பலி ! Reviewed by Madawala News on 7/05/2016 05:40:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.