Accaddemy

மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது ..


மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது தான்சானியா பயணத்தை முடித்துக்கொண்டு கென்யாவுக்கு புறப்பட்டு சென்றார். 

 கென்யா அதிபர் உகுரு கென்யாட்டாவுடன் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பிரதமர் மோடி, 

“கென்யாட்டா மற்றும் நான் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதமயமாதல் இருநாட்டிற்கும், பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் பொதுவான சவால் என்று ஒத்து கொண்டோம். 

சைபர் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் கடத்தல், மனிதர்கள் கடத்தல் ஆகியவற்றிற்கு எதிராக போரிடுதல் உள்ளிட்டவையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் செய்து உள்ளோம்,“ 

நைரோபியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி அங்கு மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்
 
”மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

பயங்கவாதிகளுக்கு யார் பாதுகாப்பான உறைவிடம் வழங்குகிறார்களோ, அவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது .. மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது .. Reviewed by Madawala News on 7/12/2016 10:13:00 AM Rating: 5