Accaddemy

வகவம் வருடாந்த கலை விழாவில் கலைவாதி கலீல் கௌரவிப்பு..


வகவம் வருடாந்த கலை விழாவும்,  கௌரவிப்பும்  சிறப்பு கவியரங்கும்  இன்று (17)  ஞாயிற்றுக்கிழமை  காலை  வெள்ளவத்தையிலுள்ள  தமிழ் சங்கத்தில்  வகவத் தலைவர் 
 என்.நஜ்முல் ஹுசைன்  தலைமையில்  நடைபெற்றது. இதன் போது இரண்டாண்டு  கால வகவ  நிகழ்வுகளின்  சுவடுகள் அடங்கிய வகவப் பதிவுகள்” என்ற நூலும்  வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில்காவ்யபிமானி விருது பெற்ற நவமணி பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினரானகலைவாதி கலீல் பொன்னாடை போத்தி மாலை அணிவித்துபாராட்டி கௌரவிக்கப்படுவதையும்,  கலாசார அலுவல்கள்திணைக்களப் பணிப்பாளர் அனூஷா கோகுள பிரனாந்துவிசேட அதிதியாக அழைக்கப்பட்டு,  உரைநிகழ்த்துவதையும்,  “சிங்கள - தமிழ்க் கவிதைகள் உறவுகள் என்னும் தலைப்பில்மொழி பெயர்ப்பாளர் - சிங்கள - தமிழ் இலக்கியசெயற்பாட்டாளர் ஹேமச்சந்திரன பதிரன தமிழ் மொழியில் சிறப்புரையாற்றுவதையும் வகவத் தலைவர் என்நஜ்முல்ஹுசைன் தலைமையுரையாற்றுவதையும் வகவம் ஸ்தாபகத்தலைவர் டாக்டர் தாஸிம் அஹமது கௌரவிப்பு உரை நிகழ்த்துவதையும் காணலாம்.

மேலும் இந்நிகழ்வில  “மானுடம் பாடும் கவிதைகள் எனும்கவிதைத் தொகுப்பிற்காகஅந்த கவிதைத்தொகுப்பாளர்களில் ஒருவரான மேமன் கவிக்கும் சின்னம்வழங்கி  பாராட்டி கௌரவிக்கப்படுவதையும் மேடையில் அதிதிகள் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்டோரில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்

இதன் போது மேமன் கவியின் தலைமையில சிறப்புகவியரங்கும் நடைபெற்றது.
வகவம் வருடாந்த கலை விழாவில் கலைவாதி கலீல் கௌரவிப்பு.. வகவம் வருடாந்த கலை விழாவில் கலைவாதி கலீல் கௌரவிப்பு.. Reviewed by Madawala News on 7/18/2016 06:44:00 AM Rating: 5