Tuesday, July 12, 2016

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பயங்கர பூகம்ப அபாயம் ! நேச்சர் ஜியோ சயன்ஸ் ஆய்விதல் எச்சரிக்கை ...

Published by Madawala News on Tuesday, July 12, 2016  | இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு பயங்கர பூகம்ப அபாயம் உள்ளதாக ஆய்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும் அளவிலான ராட்சத பூகம்பம் ஒன்று வங்காளதேசத்திற்கு அடியில் உருவாகி உள்ளதாக பூகம்ப ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.

இதுதொடர்பான ஆய்வறிக்கையானது நேச்சர் ஜியோ சயன்ஸ் ஆய்விதல் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் ஆய்வாளர்கள் உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகையின் கீழ்உள்ள 2 கண்ட தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கண்டத்தட்டு சிதைவு ஏற்பட்டால் பிராந்தியத்தில் உள்ள சுமார் 140 மில்லியன் மக்கள் (14 கோடி பேர்) பாதிக்கப்படுவர் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். பூகம்பத்தினால் (பூமி குலுங்குதல்) மட்டுமல்ல நதிகளின் போக்கில் மாற்றம் ஏற்படலாம்இ கடல்மட்டத்திற்கு மிகவும் அருகாமையில் ஏற்கனவே அபாய கட்டத்தில் உள்ள நிலப்பகுதிகளிலும் கடுமையான மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சப்டக்‌ஷன் மண்டலமாக இந்த புதிய பூகம்ப பகுதி அறியப்பட்டுள்ளது.  இதில் பூமியின் மேலோட்டின் ஒருபகுதி அல்லது டெக்டானிக் பிளேட் மெதுவாக மற்றொரு பிளேட்டின் அடியில் செல்லும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. சப்டக்‌ஷன் மண்டலத்தில்தான் இதுவரையில் உலகின் மிகப்பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்இ சுனாமி அலைகள் தாக்கியதில்  230இ000 பேர் பலியாகினர். 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டுஇ சுனாமி அலைகள் தாக்கி 20 ஆயிரம் பேர் அடித்து செல்லப்பட்டனர் மற்றும் புகுஷிமா அணு உலை விபத்து நேரிட்டது. இதுபோன்ற மிகப்பெரிய பூகம்பங்கள் இத்தகையதே.

இத்தகைய சப்டக்‌ஷன் மண்டலம் இதுவரை கடலுக்கு அடியில்தான் இருந்தது ஆனால் இப்போது இந்தியா வங்கதேசத்துக்கு கீழ் உள்ள சப்டக்‌ஷன் மண்டலம் முழுதும் நிலப்பகுதியில் உள்ளது. இதுவே பூகம்ப அச்சுறுத்தலை இரட்டிப்பு ஆக்கியுள்ளது. 

கண்டத்தட்டுகளுக்கு இடையே சுமார் 400 ஆண்டுகளாக அழுத்தம் சேர்ந்துள்ளது இவ்விடத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டதாக வரலாற்று சான்றுகள் கிடையாது.  ஆய்வின் முன்னிலை பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர் மைக்கேல் ஸ்டெக்லர் இப்பகுதியில் அழுத்தம் பலமடங்கு அபாயகரமாக சேர்ந்து அடைவு கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

அழுத்தமானது வெளிப்படுகையில் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 8.2 அல்லது 9-ஐயும் கடக்கும் அதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்திய பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளை கொண்டுள்ள ராட்சத கண்ட தட்டுஇ வடகிழக்கு நோக்கி முட்டி மோதி ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது பல மில்லியன் ஆண்டுகளாக. இந்த பெருமோதல்தான் இமயமலை வளர்வதற்கு காரணமாக இருந்தது.  இதுபோன்ற நிகழ்வின் காரணமாக 2015-ல் நேபாளத்தில் 9000 உயிரிழப்பு மற்றும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் பூகம்பம் ஏற்பட்டது என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கதேசமும்இ கிழக்கு இந்தியாவும் மிதமான நிலநடுக்கங்களுக்கே தாங்காத பூமிப்பகுதியின் மேல் உட்கார்ந்திருக்கிறது  பிரம்மபுத்திரா கங்கை நதி படுகையின் மீது அமர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். 

பூமிக்கு அடியில் 12 மைல்களுக்கு வெறும் சேறும் சகதியும் உள்ள பகுதியாகும். இதனடியில்தான் சப்டக்‌ஷன் மண்டலம் உள்ளது. ஆகவே இப்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டால் சாலைகள் நதிகள் கட்டிடங்களை பூமி விழுங்கி விடும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் பங்கு கொண்டிருந்த டாக்கா பல்கலைக்கழக ஆய்வாளர் சையத் ஹுமாயுன் அக்தர் கூறிஉள்ளார். மெக்சிகோ ஸ்டேட் பல்கலை கழக நிலநடுக்க ஆய்வாளர் ஜேம்ஸ் நி பேசுகையில்இ இந்த ஆய்வு சரியானதாக இருந்தால் அழுத்தம்கூடி வரும் பிளேட் பகுதியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கிழக்கு இந்தியா நிச்சயம் கடுமையான எதிர்பாராத விளைவுகளை சந்திக்கும். இதன் விளைவுகள் மியான்மர் வரை பரவுன் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top