Oceas

கனடா வன்கூவர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல்



கனடா வன்கூவர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல்ஜூலை 11ம் திகதி திங்கற்கிழமை புறநகரான பெர்னபியில் அமைந்துள்ள ரோயல் பெலஸ் மண்டபத்தில் மிக  விமர்சையாக  நடைபெற்றது. 

இதுபற்றி மேலும் அறியவருவதாவது SLIF அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல் மாலை எட்டு மணியளவில் அல் ஹாபிஸ் நபில் ரஹ்மதுல்லாஹ்வின் கிராத்துடன் ஆரம்பமானது. 

இதில் அஷ்ஷெய்க் அர்ஷாத் அஷ்ரப் (நளிமி) அவர்கள் சிறப்புரையாற்றினார்.ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஐநூறுக்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

இங்கு இலங்கை முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவு பரிமாரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

zacky junaid, vancouver.



 
கனடா வன்கூவர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல் கனடா வன்கூவர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல் Reviewed by Madawala News on 7/13/2016 01:13:00 AM Rating: 5