டொல்பின் வேனில் பசு மாடு­ கடத்தல்.. அதி­ர­டிப்­ப­டை­யினர் துப்­பாக்கி சூட்டில் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தின் விபரம்.



திருக்­கோவில் தாண்­டி­யடி பிர­தே­சத்தில் இருந்து 3 பசு மாடு­களை சட்­ட­வி­ரோ­த­மாக கடத்திச் சென்ற வேன் மீது விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் துப்­பாக்கி பிர­யோகம் மேற் கொண்­ட­தை­ய­டுத்து வேன் ஆற்றில் பாய்ந்து வீழ்ந்­தது. இத­னை­ய­டுத்து பசு மாடு­களை கடத்தி வந்த கடத்­தல்­கா­ரர்கள் வேனை கைவிட்டு விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

வேனும் பசு மாடு­களும் விசேட அதி­ர­டிப்­ப­­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டன. இந்த சம்பவம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை வேளையில் சாகாமம் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக திருக்­கோவில் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தாண்­டி­யடி பகு­தியில் பட்­டி­ஒன்றில் இருந்த பசு­மாடு மற்றும் மேய்ச்­சலில் ஈடு­பட்­டு­வந்த மூன்று பசு­மா­டுகள் சம்­ப­வ­தி­ன­மான நேற்று அதி­காலை சுமார் 3 மணி­ய­ளவில் வேன் ஒன்­றிலும் கார் ஒன்­றிலும் வந்த கடத்தல் கும்பல் மாடு­களின் கால்­களை கயிற்றால் கட்டி வேனில் ஏற்றிச் சென்­றுள்­ளனர்.

இத­னைக்­கண்ட பொது மக்கள் 119 எனும் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு தெரி­வித்­தனர்.

தாலி­போட்ட ஆற்­றுப்­ப­கு­தியில் நின்ற விசேட அதி­ர­டிப்ப­டையினர் வேனை நிறுத்­து­மாறு பணித்­த­போதும் வேன் நிறுத்­தாமல் சென்­றதால் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிபிரயோகம் மேற் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கடத்தல் காரர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
டொல்பின் வேனில் பசு மாடு­ கடத்தல்.. அதி­ர­டிப்­ப­டை­யினர் துப்­பாக்கி சூட்டில் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தின் விபரம். டொல்பின் வேனில் பசு மாடு­ கடத்தல்.. அதி­ர­டிப்­ப­டை­யினர் துப்­பாக்கி சூட்டில் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தின் விபரம். Reviewed by Madawala News on 7/27/2016 11:15:00 AM Rating: 5