Free Space

கூட்டு எதிர்கட்சி ஆட்டம் கண்டது ! காரணம் பெசில்


முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ தலைமையில் பதுளை நகரில் கடந்த வாரம் ஆரம்பமான அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு கைவிடப்பட்டுள்ளாக அரசியல் உயர்மட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்கட்சியில் பொசில் ராஜபக்‌ஷவின் செயற்பாடுகளுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமான இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பெசில் ராஜபக்‌ஷவின் தவறான வழி நடத்தல் காரணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தாக விமர்சங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தன இந்த நிலையில் அவரை கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஓரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் விமல் வீரவன்ச , கம்மன்பில , தினேஷ் போன்றவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் நெருக்கடியில் தள்ள சதி செய்வதாகவும் அவர்களை நம்ப தயாரில்லை எனவும் பெசிலுக்கு ஆதரவான தரப்பு கூறிவருவதுடன் பெசில் தலைமையில் வெற்றிபெற்ற தேர்தல்களை பற்றி பேசாதவர்கள் அவர் தலைமையில் ஒரு தேர்தலில் தோற்றமை தொடர்பில் விமர்சிப்பது வேடிக்கை என குறிப்பிடுகின்றனர்.

கூட்டு எதிர்கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்க மஹிந்தனந்த அலுத்கமகே , ரோஹித அபேகுனர்தன, நாமல் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்கட்சி ஆட்டம் கண்டது ! காரணம் பெசில் கூட்டு எதிர்கட்சி ஆட்டம் கண்டது  ! காரணம் பெசில் Reviewed by Madawala News on 7/12/2016 08:41:00 AM Rating: 5