Accaddemy

கல்விப் பணிப்பாளரின் ஆசிரியைமீதான பாலியல் பாலாத்காரம்: திருகோணமலை மாவட்டத்தில் சம்பவம்

 
ஏ. எல். எம். அஸ்லம்
திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வலயத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி வலயமொன்றின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கெதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேற்றுமாறு கிழக்குகிழக்குமாகாண ஆளுநர், கிழக்குமாகாண முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கோரிக்கையை இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கிழக்குமாகாண  சங்க செலாளர் ஏ.எல். முஹம்மட் முக்தார் அவசர தொலைநகல் மூலம் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தனது கணவரை விட்டு பிரிந்து வாழும் திருகோணமலை மாவட்ட பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவரை அம்மாவட்டத்தைச் சேர்ந்த வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஆறுமாத காலமாக பல்வேறு ஆசைவார்த்தைகளையும், தொழில் ரீதியான உறுதிமொழிகளையும் வழங்கி பாலியல் தேவைகளுக்கு தொடர்ந்தும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இவரது நடவடிக்கைகளை அன்மைக்காலமாக அவதானித்துவந்த இளைஞர்கள் குழுவொன்று கடந்த சனியன்று (09) திருகோணமலை பிரதேச உல்லாச விடுதியொன்றில் வைத்து கையும் மெய்யுமாக இருவரையும் பிடித்துள்ளது. 

இதனையடுத்து குறித்த இளைஞர்களிடம் கெஞசி மன்றாடி விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாமெனவும் குறித்த ஆசிரியை தான் திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதியளித்ததுடன் குறித்த வலயத்தை விட்டுதான் இடமாற்றம் பெற்றுச் செல்வாதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வித் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியினையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் காரணமாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளான நாம் பெருத்த அவமானத்தை சமூகத்தின் மத்தியில் நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

குறித்த வலயக்கலவிப் பணிப்பாளர் இதற்கு முன் கடமையாற்றிய பிரதேசத்திலும் இவ்வாறான பாலியல் துஸ்ப்பிரயோகங்களில் சில ஆசிரியைகளுடன் ஈடுபட்டதாகவும் இச்சம்பவங்களை கிழக்கு மாகாண கல்வியமைச்சில் தமக்குள்ள செல்வாக்கையும் பணபலத்தினையும் கொண்டு மூடி மறைத்துவிட்டதாகவும் நாம் அறிகின்றோம்.

குறித்த ஆசிரியையை பாலியல் துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் காரணமாக குறித்த கல்விவலயத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் சில நாட்களாக அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே இச்சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை நடாத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட்டு கிழக்குமாகாணத்தை விட்டு வெளியேற்றுமாறு கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விப் பணிப்பாளரின் ஆசிரியைமீதான பாலியல் பாலாத்காரம்: திருகோணமலை மாவட்டத்தில் சம்பவம் கல்விப் பணிப்பாளரின் ஆசிரியைமீதான பாலியல் பாலாத்காரம்: திருகோணமலை மாவட்டத்தில் சம்பவம் Reviewed by Madawala News on 7/14/2016 03:25:00 PM Rating: 5